உனக்காக தோழா
துக்கம் வேண்டாம் தோழா,
என் கைகள் உன் துணையாகும்.
துவண்டு விடாதே தோழா,
என் கைகள் உனைத் தாங்கும்.
வலிகள் வேண்டும் தோழா,
வாழ்வுதனை செம்மையாக்க.
தோல்விகள் வேண்டும் தோழா,
வெற்றியை நிலைநாட்ட.
கோவம் வேண்டாம் தோழா,
அமைதி பெருகும்.
கர்வம் வேண்டாம் தோழா,
இன்பம் கூடும்.
பணிவுகொள் தோழா,
உயர்ந்தவரைக் கண்டால்
துணிவுகொள் தோழா,
எதிரியைக் கண்டால்.
நூல்பல படி தோழா,
அறிவு பெருகும்.
இசைபல கேள் தோழா,
நிம்மதி கிடைக்கும்.
தமிழே நன்மொழி,
அறிந்திடு தோழா.
தமிழே உயர்மொழி,
கர்வம்கொள் தோழா.
தமிழுக்கென்றும் அழிவில்லை,
இறைவனுக்கே தெரியும் தோழா....