தற்காலிகக் காதல்
 
 
            	    
                உன் மனதின் புழுதியிலே
காதல் விதை நான் விதைத்தும்
மழையாக மாறி
அன்பு மழை நான் தெளித்தும்
தூக்கத்தை தினம் தொலைத்து
சொல்லுக்கு உயிர் கொடுத்தும்
உன் மனதின் ஆழத்தில்
நம் காதல் வேரோட 
நீயாக உன் மனதில் 
தடையொன்று இட்டதென்ன...
தற்காலிகக் காதலியே!
தடையங்கள் இல்லாமல்
தவிக்க விட்டுப் போனதென்ன...!
***
 
                     
	    
                
