பிரிவு

கை பிடித்து நடந்தவள்
கைவிட்டுச் சென்றபின்,
கூடவே இருந்தவள்,
முடியாதென்று போனபின்,
இமைக்குள் வசித்தவள்,
இமைவிட்டுச் சென்றபின்,
கண்ணீரே சொந்தமானது.
கைவிரல்களும் இங்கே தனிமையில்,
இதழ்களும் இங்கே வெறுமையில்,
உன்முகம் பார்த்தே களித்த கண்கள்,
உன்சொல் கேட்டே மகிழ்ந்த இதயம்,
யுகம்பல சென்றாலும் அழியா உன் நினைவுகள்,
மேகம் விட்டு வான்மழை பிரிகையில்,
இடி இடித்துக் கதறியலும் வானம் போல,
உன் நினைவுகளால் நானும்...