விருந்தோம்பல்

வந்தாரை வாழவைக்கும் கலாச்சாரம் நமது
வீட்டிற்கு வருவோரை வயிறு நிறைத்தே அனுப்பும்
எதிரியாய் இருந்தாலும் சாப்பிட்டு போகவே சொல்லும்
ஒருவகை இருவகை அல்ல‌
பலவகை அறுசுவை உணவு வகைகளின்றி எந்த விருந்தோம்பலும் இல்லை..

இன்று காலச்சார மாற்றத்தில்
அவரவரின் அந்தஸ்த்தை அறிவிப்பதாய் உள்ளது இந்த விருந்து...
சாப்பாடு கூட ஒரு மருந்து...
அளவாய் சாப்பிடும் வரை
அளவுக்கு மிஞ்சினால்...

கிடைக்கும் உணவை வீணடிக்காதீர்கள்..
தெருவிலும் கோவில் வாசலிலும் பிச்சையேந்துபவர்களை நினைத்துப்பாருங்கள்
பல ஆப்பிரிக்க நாடுகளில்
பட்டினிச்சாவினைப் பற்றி வரும் செய்திகள், புகைப்படங்களை நினைவுகூறுங்கள்..

என்னாலான அறிவுரைகள் கூறியாயிற்று..
மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைக்கிறார்கள்...
உண்டுவிட்டு வந்து அடுத்த அறிவுரையை ஆரம்பிக்கிறேன்...
உண்டுகளித்து ஏப்பம் விட்டு தூங்கி எழுந்தபின்..
வரட்டா நட்புக்களே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Mar-16, 6:41 am)
Tanglish : virunthombal
பார்வை : 6113

மேலே