தொழிலாளி
உலகை முன்னேற்ற வந்தவன் தொழிலாளி
உணவைக்கூட பலநேரம் மறப்பவன் தொழிலாளி
உல்லாசத்திலே உயர்வானோர் இருக்கும் வேளை
உபவாசமிருந்து அவர்க்காய் உழைப்பவன் தொழிலாளி
பெரியபெரிய கட்டிடத்தின் பின்புலமும் இவனே
தொழில்வளர்ச்சி கண்டிடவே மூலதனம் இவனே
இரும்பெனவே தன்னுடம்பை ஆக்கித்தான் வச்சிருப்பான்
கரும்பெனவே வாழ்க்கையினை ஆக்கிடவே உழைச்சிருப்பான்
தன்தொழிலை தெய்வமாக மதிப்பவனே தொழிலாளி
பசிபொறுத்து பலபேரின் பசிபோக்கச் செய்திடுவான்
விதிவசமோ சதிவசமோ இவன்வாழ்வு மிகக்கீழே
வித்தைகாட்டும் தலைவனெல்லாம் இவனைவிட மிகவும்மேலே
மிகச்சிறந்த தொழிலாளி யாரெனவே கணக்கெடுத்தால்
இவர்தானோ அவர்தானோ எனப்பலபேர் சொல்லிடுவர்
சம்பளமோ எதிர்ப்பார்ப்போ ஏதுமின்றி வாழ்நாள்முழுதும்
நமக்காயுழைக்கும் தாய்தானே முதன்மையான தொழிலாளி....