செலவளி நேரத்தைச் செலவளி
செலவளி நேரத்தைச் செலவளி
மழலையாய் மாறிச் செலவளி
மழலைகளுடன் சேர்ந்தே செலவளி
உற்சாகம் கொடுக்குமிந்த நல்வழி
பலவழி உண்டு நமக்கு
நாள்முழுதும் மெகாத்தொடர்கள் இருக்கு
விளையாட்டு ரசித்திட இருக்கு
குடும்பத்துக்குள் சண்டையிட நேரமிருக்கு
இதையெல்லாம் கொஞ்சம் ஒதிக்கிவைத்து
செலவளிப்போம் நேரத்தை குழந்தைகளுக்கு
உற்சாகமடையும் செல்லக் குழந்தைகளே
நம்உற்சாகத்தையும் பன்மடங்கு பெருக்கிடுமே
குழந்தைகளின் உற்சாகம் நமக்கும் மகிழ்ச்சியே
நமது மகிழ்ச்சியே அவர்களின் ஊக்கமருந்து
ஓடியாடி விளையாட குழந்தை அழைத்தால்
உடனே இசைவீருமக்கு வாழ்வே மெகாவிருந்து....

