மவிமுக தனித்துப் போட்டி - மொடாக்குடி மாடசாமி அழைக்கிறார்
மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் மொடாக்குடி மாடசாமியின் அறிவிப்பு.::::
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘எனது உயிரினும் மேலான மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின் தொண்டர்களே, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பல கூட்டணிகள் உதிரிக்
கட்சிகள், உடைந்து சிதறிய கட்சிகள், ஆளில்லாக் கட்சிகளையெல்ல்லாம் சேர்த்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறும். எந்தக்
கட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறமுடியாது என்பது நமது கட்சியின் கணிப்பு. இது பற்றி நமது கட்சியின் பொதுக் குழு, செயற் குழு
மற்றும் மாவட்ட, வட்டத் தலைவர்களின் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. முடிவில் நமது கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து
நிற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது . நமது கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 30,000 வாக்குகள் இருப்பதாலும் பிற கட்சிகளில் இருக்கும் குடிகாரர்களும்
நமக்கே வாக்களிக்க உள்ளதால் 234 தொகுதிகளிலும் நமது கட்சியே வெல்லும்சூழ்நிலை உள்ளது. எதிர் கட்சிகளே இல்லாமல் ஆட்சி நடத்தும்
இக்கட்டான நிலை நமக்கு ஏற்படும்போல் தெரிகிறது. அதற்கு நாமென்ன செய்யமுடியும்? எனவே தேர்தலில் போட்டியிட விரும்பும் பெருங்’குடி’
நண்பர்கள் வருகிற 15ஆம் தேதிக்குள் நமது கட்சியின் தலைமை நிலையத்திற்கு உரிய சான்றுகளுடன் வரவேண்டுமென்று அன்புடன் அழைக்கிறேன். .