ஒன்றுதான் ஆனால் ஒன்றில்லை

காக்கையும் ,குயிலும்
ஒன்றுதான்
நிறத்தில்
மட்டும்

தேனும்,லட்டும்
ஒன்றுதான்
சுவையில்
மட்டும்

நிலவும்,வானும்
ஒன்றுதான்
நம் கண்களுக்கு
மட்டும்

உப்பும், நீரும்
ஒன்றுதான்
கடலில்
மட்டும்

நகமும் சதையும்
ஒன்றுதான்
விரலில்
மட்டும்

இவைகள்
ஒப்புமைகள் தான்
ஆனால்
ஒற்றுமைகள்
அல்ல !!!!!!!!!!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (9-Apr-16, 6:10 pm)
பார்வை : 142

மேலே