பேரம்
சொகுசு வாழ் மாக்களே !!
கடும் வெயிலில் வாடி, துவண்டு, விற்கும் பொருளுக்கா நீ பேரம் பேசுவது !!
குளிரூட்ட பட்ட அறையில், எப்பொருள் எவ்விலை என்றாலும், வாரி போடுவாய் கூடைக்குள்ளே !!
உனக்குள் மனிதநேயம் உண்டேஎனில் பேசாதே பேரம் !! கொள்ளாதே கொல்லைஎனும் சொல்லால் !!
ஏழைக்கிழவனிடம் பேசும் பேரத்தை, பெரும் வியாபாரிடம் பேசா கோலை நீ !!
நீ பார்த்து பார்த்து வாங்கும் ஒரு நச்சு குளிர்பானத்தை விடவா, ஓர் ஏழை விவசாயின் இளநீர் கேடு ?
அதை ஒரு நாள், நீ நூறுகளில் செலவு செய்து வாங்கினால் என்ன கேடு ? வளருமே இந்த பாவ விவசாயம் !!
"பேசாதீர் பேரம் :