வானம் சிந்தும் கண்ணீர் துளி-மழை

அழாதயடா கண்ணா...!
யார் அடித்தா
உன்னை...?
இப்படி விடாமல்
அழுது கொண்டிருக்கிறாயே...!

பசிக்கிறதா..?
உண்ண உணவளிக்கவா...?
இல்லையா....!

அப்படியென்றால்
விளையாட பொம்மைகள்
வேண்டுமா..?
என்ன
அதுவும் வேண்டாமா...!

பின்ன என்னடா
வேண்டும் உனக்கு
ஏன் இப்படி
அழுது கொண்டிருக்கின்றாய்...?

- பச்சை பசேல் என்ற
வயலைக் காண வேண்டும்...!

எழுதியவர் : நித்யஸ்ரீ (12-Apr-16, 9:17 pm)
பார்வை : 184

மேலே