ஒத்தையில நிக்கிறியே
வாழும் வயசில..
வாழாம நீ இருந்து...
சாக நினைக்கிறியே மகளே !
இறந்த காலத்துல...
இறந்து போன... வாழ்வையெண்ணி..
இன்னும் துடிக்கிறியே மகளே..!
உனக்கு மனசிருக்கு...
உள்ளுக்குள்ளே ஆசையிருக்கு
உணர்ந்து நடந்துக்கடி மகளே !
நான் சாவுங்காலத்துல..
வாழ்விழந்து நீ யிருக்க..
எம்மனசும் பொறுக்குதில்ல மகளே !
கூறுகெட்ட சனம்...
குறைகூறித் திரியையில..
குடலெரிந்து போறேண்டி மகளே !
குறையேதும் இல்லாத
குமராக நீ இருந்து...
வசைகேட்க வேனாண்டி மகளே !
வாழ்க்கையில சோதனைகள்
வருவதெல்லாம் சகசமடி...
வருந்தி நீ போகாதே மகளே !
நித்தமும் நீ பழையதெண்ணி
ஒத்தையில நிக்கிறியே..!
பெத்த மனம் சாகுதடி மகளே !
உனக்கெனத் துணையொன்று
இருக்கனுண்டி வாழ்கையில..
இதை மறந்து போகாதே மகளே !
நாளை வருகின்ற காலமதில்
நன்மை தீமை அறிந்துதவ..
வாழ்க்கைத்துணை தேவையடி மகளே !
ஒத்தையில நிக்கிறியே..!
தாய் மனச வதைக்கிறியே
ஒன்று சொல்வேன் கேட்கிறியா ?
கண்ணு மூடிப் போகுமுன்னே
கண்ணே நீயும் பெண்ணா மாறி
என் மனங்குளிரச் செய்திடேண்டி மகளே !