புயலின் மையப்புள்ளியாய்

தென்றலின் ஆரம்பமாய்
திகழாவிட்டால் பரவாயில்லை
ஒரு
புயலின் மையப்புள்ளியாய்
புறப்பட்டுவிடக் கூடாது !
பனிமழையின் தூவலாய்
பரவாவிட்டால் பரவாயில்லை
ஓர்
அமிலமழை மேகமாய்
அமைந்துவிடக் கூடாது !
பால்நிலவின் ஒளியாய்
பழகாவிட்டால் பரவாயில்லை
ஒரு
சுட்டெரிக்கும் சூரியனாய்
சுற்றிவிடக் கூடாது !
சிரிப்பின் ராகமாய்
ஒலிக்காவிட்டால் பரவாயில்லை
ஓர் அழுகையின் பல்லவியாய்
அமைந்துவிடக் கூடாது !

எழுதியவர் : மதிபாலன் (16-Apr-16, 6:45 am)
பார்வை : 77

மேலே