உறவுகள்

பொய்களை உண்மையென்று
உண்மையாய் நம்புவதாய்
பொய்யாய் நடித்து
உண்மைநிலையையே மறந்து
பொய்யாய் வாழ்கின்றேன்
தோழி.

உறவுகளே கரவுகளான
பின்னும் அவையே
சத்தியமான நித்தியம்
என்று தூயதாய் நம்பி
ஏக்கமாய் நிற்கின்றேன்
தோழி.

விசேஷமாய் வேஷமிட்டு
பாஷையிலும் விஷமிட்டு
அவர் பேசும் பேச்சினையே
உய்கதியாய் பூஷித்து
வெகுளியாய் பார்க்கின்றேன்
தோழி.

அவர்வாழ நான்சிறப்பேன்
என்பதையே உயிர்மறையாய்
அவராற்றும் தவறுகளையும்
அவர்பேரின் குறைகளையும்
குற்றங்களாய் ஏற்கின்றேன்
தோழி.

இதையெதிர்க்க துணிவுண்டோ
எனையணைக்க மனமுண்டோ
இனியேனும் வாழ்வுண்டோ
இதிலிருந்து உய்வுண்டோ
காத்துக் கிடக்கின்றேன்
தோழி.

எழுதியவர் : சுபாசுந்தர் (16-Apr-16, 2:16 pm)
பார்வை : 2926

மேலே