பிரிந்த உறவு

இப்படி...
என்னை விட்டு...
நீ... பிரிவாய்...
என்று...
அறிந்திருந்தால்....
நான் பிறவாமல்...
கருவிலேயே மரித்திருப்பேன்...

என்னுடைய எதுவிலும்...
நீ இல்லையே...

நான் தவழ்ந்ததை...
நான் சிரித்ததை...
கனவில் நான் மிரண்டதில்...
கதை சொல்லி நான் உண்டதில்....

என்னுடைய முதல் நடையில் ....
என்னுடைய முதல் வார்த்தையில்
எதிலும் நீ இல்லை என்னுடன்....

என் துன்பத்தில் நீ இல்லை...
உன் இன்ப-த்தில் நான் இல்லை....

கன்னத்தில் கருஞ்சாந்து...
கழுத்தில் கருமணி...
இடுப்பில் அரைஞாண்....
அழுதால் கிலுகிலுப்பை....
பற்றி இழுத்து பசி...
தீர்த்து கொள்ள...
உன் மார்....
எதுவும் இல்லை எனக்கு...

அழும் என்னை...
அள்ளி எடுத்து ....
உச்சி மோந்து....
உளமார முத்தமிட்டு....
தொட்டிலிட்டு...
தாலாட்டி...
எதுவும் இல்லை எனக்கு....

சமையலறை வாசனை....
வீசும் உன் முந்தானையில்...
முகம் துடைக்கவில்லை...
அடமாய் அடம் பிடித்து....
அடி வாங்கவில்லை....
விசும்பி அழுது....
விரும்பி நீ என்னை...
கட்டியணைத்து....
தலை கோதி....
செல்லமே ...
சமாதானம் சொல்ல...
நீ இல்லை.....

என் வளர் பருவங்கள்...
அனைத்தும்.... ...
நீ இல்லாமல்...
வெறுமையாக

என் மஞ்சள் நீராட்டு....
ரகசியமாய்....
குளியலறையில்
மங்கலாய்... என் நினைவில்...
என் அழுக்கு துணி கந்தல் மட்டுமே....

உன் முகம் தெரியாமலே...
முடிந்து விடும்...
என் வாழ்க்கை....
தவறென்ன செய்தேன்....
தாயே....

தாங்கவில்லை எனக்கு...
ஏதோ ஒரு தாய்..
தன குழந்தையை...
சீராட்டும்போது....

அம்மா!! தாயே!!!
யாரேனும் எனக்கு...
தயை கூர்ந்து....
தாய்மையை பிச்சையிடுங்கள்!!

செத்தாலும் மறக்க மாட்டேன்....
செய்நன்றியை....
-இப்படிக்கு....
அனாமிகா (பெயரில்லாதவள்)
அரசு குழந்தைகள் காப்பகம்.......ஆனந்த் வி

எழுதியவர் : ஆனந்த் வி (15-Apr-16, 11:55 pm)
Tanglish : pirintha uravu
பார்வை : 450

மேலே