எனக்குள் ஒருவன்

ஆழியின்...
அலையில்...
அலைந்து....
திரிந்து....

அடங்காத ஆசைகள்....
உறங்காத உணர்வுகள்...
என.
உலக பந்தங்களின்...
உளைச்சல்களால்...
உள்ளம்...
உடைந்து ...
உட்கார்ந்தேன்....

என் சாயலில் ...
இன்னொருவன்...
என் அருகில்....

சற்றே...
நெருங்கினேன்...
என்.. இரட்டை போல்...
ஒரு சாத்தான்....
தோற்றம்....

அச்சமாய் இருந்தது...
அருகில்... நிற்க ...
கோபம், பொறாமை,
சூது, சுயநலம்...
துரோகம் , ஆணவம்...
செருக்கு, வக்கிரம்...
அழுக்கு கலவையாய்..
அவன் முகத்தில்...

யாரென்ற வினாவுடன்...
அருகில் சென்றேன்...
கலைந்தே...
காணாமல் போனான்...

சற்றே விலகினேன்....
மீண்டும் தோன்றினான்...
மிருக சிரிப்புடன்...

புதிராய்...
தோன்றினான்...
புரியாமல்...
புத்தி...
பேதலித்தேன்...
அருகி ... விலகி...
விலகி... அருகி...
யாரென்று புரியாமல்...
அவனை தேடி... தேடி..
என் காலம் கழிந்தது...

முகம் தெரியாத...
அவனுக்கு...
பயந்து .. பயந்து...
என் கால பயணம்...
இன்ப-த்தை தேடி... தேடி...
தோற்று...

கடைசி நேரத்தில்...
கண்கள் மூடினேன்...
கால சக்கரம்...
அனைத்தையும்...
சோழியாய்...
சுற்றி... சுற்றி ...
என்...
நெஞ்சில்...
சுழன்று...
ஒய்ந்தது....

கடை கண்ணில்...
உறைந்த...
கண்ணீர்...
புலப்படுத்தியது...
புது...உண்மையை...

மதிமயங்கி...
ஓடி... தடம் தேடி...
அகப்படாத...
அந்த... அந்நியன்...
என் நிழலே....

என் தீயவை ...
என் நிழலாக..
என் சாயலில்...

நிழலை புரியாமல்...
நிஜத்தை விலகி...
நிராயுதபாணியாக நான்....

நற்கவசங்கள் விலகி செல்ல...
தீய நிழலை தேட... தேட...
வீழ்த்தியது என்னை....
விதியின் அம்பு....

தோழா...
நிழலை விலக்கி...
நிஜத்தை கொள்...
நிம்மதி...
நிச்சயமாய்...
உன் வசம்.... ஆனந்த் வி

எழுதியவர் : ஆனந்த் வி (17-Apr-16, 3:04 pm)
Tanglish : enakkul oruvan
பார்வை : 245

மேலே