எனக்கு பிறவா என் மகள்

பஞ்சு பொதியாய்...
பிஞ்சு நீ என் கைகளில்...

என் மறு பாதி
என் கைகளில்...

சிலிர்த்து நிற்கும் முடியழகு...
கண்ணே... திறக்காத உன் கண்ணழகு...
ரோஜா பூ பாதம் அழகு...
அம்மாவின் மார் ருசித்து...
பசியடங்கும் நீ அழகு...

வளர.. வளர...
வான்மதி அழகு...
நுகரும்போது...
உன் பால் வாடை அழகு...

கழுத்திலிருக்கும்...
கருமணி அழகு...
தூக்கும்போது...
கத கதப்பாய்...
பரவும்... உன்..
சூச்சூ... அழகு ...

பொக்கை வாய்...
நகை அழகு...
உன் உமிழ்நீர்...
தெறிக்கும் அழகு...

"க்கா" "ங்கா"
"பூ... ஞா...."
உன் புது மொழி அழகு"
சிரிக்கும்போது நீ
காட்டும் சொர்க்கம் அழகு

கல்லறை காதலை
கருத்தில் கொண்டு...
மண வாழ்வை ஒதுக்கி வைத்த...
எனக்கு கனவில் மட்டுமே...
கருத்தரித்த என் மகளே...

பட்டு பாவாடையுடன்...
சுற்றி வந்து...
என் கனவில்...
சுகம் தந்த என்...
குட்டி செல்லமே...
தேவதை உனக்கு...
இன்ப-மாய் நான் சூட்டிய ...
பெயர்...
ஆனஷா...

செல்ல குட்டி தங்கமே...
கற்பனையாய்...
இருந்தாலும் ...
கற்கண்டாய் இனிக்கிறாய் ...
நீ எனக்கு...

கற்பனை ...
கண்ணீராய்,,,,
வழிந்து...
தந்தை என்...
நெஞ்சம் இனிக்க....

என்னுடைய யோகம் ...
மகளே... நீ...
வளர மாட்டாய் ....
குழந்தையாகவே...
என்னை விட்டு பிரியாமல்...
எப்பொழுதும் என் கூட...

வா மகளே...
உலகம் எனக்கு...
உணர்த்தியதை...
உனக்கு மட்டும்...
சொல்கிறேன்...

பிறக்காமல்...
பிறந்து...
பிரியாமல்...
இருந்து...
வாழவைக்கும்...
என்...
தெய்வ மகள்...
வாழ்க... ஆனந்த் வி

எழுதியவர் : ஆனந்த் வி (17-Apr-16, 2:06 pm)
பார்வை : 263

மேலே