பரிசுத்த முத்தம்

படுக்கையறைவரை
உன் நன்பணுக்கும்
அனுமதியுண்டு
சந்தேகிக்கபோவதில்லை

பிடித்த பாடல்களை
மீண்டும் மீண்டும்
முணுமுணு
சலிக்க‌போவதில்லை

பெருமழையில்
நீ நனை_ப்ரியமெனில்
நான் அருகில்...
ஆட்சேபனையில்லை

விடுமுறைக்கு
தனிமையில்
சுற்றுலாவா_உன்
கால்களுக்கு
விலங்கில்லை

படுக்கை சுகம்
போதாதா பகிர்ந்துகொள்
நகைப்பதற்கிடமில்லை

சமையல்
பிழையெனில்
சமரசம் செய்வோம்
சண்டையில்லை

என் ஆடைகள்
உன்னாடைகளோடு
கலவரமா
சலவையை சரிசெய்

அழுதும் சிரித்தும்
நீ ரசிக்கலாம்
பிடித்த தொடரில்
என் தலையீடில்லை

வாரம் இருமுறையா??
தாய் வீட்டிற்கு
நானும் வருகிறேன்
என் வீட்டிற்கு

உன் ஆடை
உன் சுதந்திரம்
குறுக்கீடில்லை

உன் இலட்சியத்தை
இழந்திருக்கிறாயா
சரிசெய்ய
துணையுண்டு
துணிவுகொள்

நிறைவேறா
ஆசைகள்
நிறைந்திருக்கிறதா
பட்டியலிட்டு பகிர்

உடல்நிலை
ஒவ்வாமையா
ஓய்வெடு
நச்சரிக்கபோவதில்லை

சில இரவுகளில்
நீ ஆணாக
முயல்கிறாயா
வெற்றிக்கு வாழ்த்து

யாதும்
கலாசார பிறழ்வா
கண்டுகொள்ளாதே!

மனித சுகத்திர‌
மையத்தில் புயல்
நடுகைசெய்யும்
கலாசாரத்தை
கழற்றியெறி

எப்போதும்
முத்தங்களின்
தொல்லையிருக்கும்
என்னிடம்
பரிபூரணமாய்
சம்மத்திக்கிறாயா??

பரிசுத்தமாய்
முத்தமிடு
எனை கணவனாயேற்று

எழுதியவர் : புலவூரான் ரிஷி (17-Apr-16, 9:58 pm)
பார்வை : 139

மேலே