இனிய இரவு

இரவு பயணம் ...
பேருந்தில் எனக்கு ஜன்னல் ஓரம்,
சொந்த ஊருக்கு...
சுகமான நினைவுகளோடு ...
குளிர்ந்த காற்று...
பறந்து செல்லும் பேருந்து...
கூடவே பிரிய மனமில்லாமல்
ஓடி வரும்...
என் சிறு வயது காதலி!
என் வெள்ளை நிலா!!
வெள்ளை வெளிச்சத்தில்,
சிற்றோடைகளும், சிறுவயல்களும்,
உறங்கி கிடக்கும் ஊர்களும்,
காதோர குளிரில்
சிலிர்க்கும் தேகம்.,
மனம் மயங்க...
காதோரம் என் தேவன்...
ராக தேவன்..
இளையராஜா ...
இன்ப-மான இரவில் ...
இதயம் தொடும் ...
"உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்..."
உறவுகள் தொடர்கதையும்
உணர்வுகள் சிறுகதையும்
ராஜாவால்
மனசோரம் வந்து எழுத ..
ஏசுதாசின் குரல் தேனாய் வழிய...
பழசை நோக்கி பறக்கும் மனதை..
இறுக்கி பிடிக்க இயலாமல் நான்...
சரணடையும் தருணம்...
என் இந்த இரவும் இளையராஜாவும்...
இப்படியே தொடராதா?
உருகி வழியும் என் மனம்...
கொஞ்சம் இளைப்பாறாதா?
மனமும், நினைவும் கரைய... கரைய...
இசையின் பயணம் தொடர...
ஏதோ ஒரு புள்ளியுள் என் அனைத்தும் நெகிழ
காலை... இந்த என்
இரவு மோனத்தை கலைக்க...
மீண்டும்...
உலக வாழ்வில்...
என் வாழ்க்கை பயணம்
ஓடி ஓடி களைத்து...
திரும்பி பார்த்தால்...
ஒன்றுமில்லை பெருமைப்பட...
பணத்திற்கு பக்கம் ஓடி...
சொந்தத்தில்...
சுகம் தேடி...
சுயநல சேற்றில்...
சுகித்து....
சிநேகம் தேடி தேடி..
சிதறுண்டு...
மீண்டும் ஒரு இரவு பயண
மோனத்தை தேடுது...
என் ... இதயம்...
"பயணங்கள் முடிவதில்லை"
"தேடுதல் தீர்வதில்லை" - ஆனந்த் வி