காதல் என்பது - 1
காதல் என்பது தனி உலகம்
எத்தனை பேர்க்கு அது தெரியும்
அதில் உறுப்பினராவது மிக சுலபம்
நிரந்தரமாவதோ வெகு கடினம்
உள்ளங்களின் புரிதலும்
உணர்சிகளின் ஆளுமையும்
ஒரே அலைவரிசையில்
சேருவதே காதலாகும்
நான் காதல் அனுபவம்
பெற்றவனில்லை
அதைப் பற்றி முழுமையாய்
அறிந்தவனுமில்லை
இருந்தும் காதலை நானும்
எழத முனைகிறேன்
அதை என் வரிகளில்
கவிதையாய் தர நினைக்கிறேன்
அவனும் அவளும்
தனித்தனி நபர்கள்
முன்பின் ஒருவரையொருவர்
அறியாதவர்கள்
அந்த நான்கு விழிகளின்
ஒரு நொடி சந்திப்பு
மின்னல் போல்
நெஞ்சில் பாய்ந்தது
மனதும் லேசாய்
ஆசைப் பட்டது
மீண்டும் ஒருமுறைப்
பார்க்கத் துடித்தது
இந்த ஒரு யுகப்பொழுதில்
அவளும் எங்கோ மறைந்து விட்டாள்
அவனும் வேகமாய் நகர்ந்தும் விட்டான்
ஏமாற்றம் ஆவலை அதிகரித்து விட்டது
அவள் யாரென்று எப்படி அறிவது
எங்கு சென்று யாரை விசாரிப்பது
பெயரும் இல்லை முகவரியும் இல்லை
அவன் மனமும் சூன்யமாய்ப் போனது
அவள் நிலையோ அதை விட மோசம்
தன் உணர்வின் சுகிதலை யாரிடம் பகிர்வாள்
உள்ளத்தின் படபடப்பை எப்படி நிறுத்துவாள்
அவனைப் பற்றி எப்படி அறிவாள்
உண்மைக் காதல் பூப்போல் மலரும்
நாட்களும் மெல்ல ஆமை போல் நகரும்
இதயத் துடிப்போ முயல் போல் ஓடும்
இருந்தும் மீண்டும் சந்திப்பு தானாய் நடக்கும்
எதிர்பாராவிதமாய் அவளைப் பாத்தான்
தன் கால்கள் நகர மறுத்ததை உணர்ந்தான்
அவள் பார்வைக்காக ஏங்கி தவித்தான்
நிச்சயம் பாப்பாள் என நம்பினான்
மனதில் உருவித தாக்கத்தை அறிந்தாள்
படபடப்போடு முகத்தை திருப்பினாள்
விழிகளும் அகல விரியக் கண்டாள்
அவளும் சிலையாய் அங்கே நின்றாள்
விழிகளும் விழிகளும் பேசிக் கொண்டன
ஓராயிரம் அர்த்தங்கள் அதனுள் பொதிந்தன
அந்த மொழிக்கு பெயரொன்றுமில்லை
அடுத்த செய்கைக்கு தடையொன்றுமில்லை
தம்மை அறியாமல் கால்கள் நகர்ந்தன
ஒருவருக்கருகில் ஒருவர் வந்தனர்
பேச முயன்று இருவரும் தோற்றனர்
பேச்சின் கட்டாயத்தை நன்கு உணர்ந்தனர்
மீண்டும் சந்திப்பதென்று முடிவு செய்து
பேசாமல் பேசி பிரிந்து சென்றனர்
பின் சந்திப்புகள் தொடர்ந்தன
அறிமுகங்கள் தானாய் நடந்தன
காதல் என்னும் வலையில்
அவர்கள் தாமாகவே வீழ்ந்தனர்
தாம் காதலர்கள் என
தமக்குள்ள நிச்சயம் செய்தனர்
மனங்களின் புரிதலா
உணர்ச்சிகளின் உந்துதலா
பருவத்தின் கோளார
புது பரிமாணத்தின் முதல் படியா
எதுவாயாயினும்
நாங்கள் காதலர்கள் என
முழக்கம் இட்டனர்
முதன்முதல் ஸ்பரிசம்
மயக்கத்தை தந்தது,
முதன்முதல் ஸ்பரிசம்
தம் நிலைமையை மறந்தது
முதன்முதல் ஸ்பரிசம்
தேகம் முழுவதும் மகிழ்ச்சியில்
திளைத்தது
முதன்முதல் ஸ்பரிசம்
புது உலகத்தை காட்டியது
முதன்முதல் ஸ்பரிசம்
ரத்த ஓட்டம் சூடாக தெரிந்தது
முதன்முதல் ஸ்பரிசம்
உள்ளுணர்வை எச்சரித்தது
அறிவும் மெல்ல தன் கண்ணை திறந்தது
பின் ஏனோ அதுவும் தூங்கச் சென்றது
சந்திப்புகள் தொடர் கதையானது
சில்மிஷங்கள் ஆனந்தத்தை தந்தது
மற்றவர் பார்வையில் படாமல் இருக்க
தனி இடம் தேடி மனமும் அலைந்தது
முதலில் மௌனமே மொழியாய் இருந்தது
சிறு சிறு பேச்சுக்கள் மெதுவாய் தொடர்ந்தது
அவனைப் பற்றி தெரிந்து கொள்ள
அவசியம் இல்லை என்றது மனது
அவள் யார் என்ற விவரம்
தேவை இல்லை என தன்
மனதிடம் அவனும் மெதுவாய்
சொன்னான்
தம் உறவுகள் பற்றி சிந்திக்கவில்லை
குடும்ப பாசம் அங்கு எடுபட வில்லை
அறிந்தவர் தெரிந்தவர் தென்படவில்லை
எவர்க்கும் அங்கு இடம் இருக்கவில்லை
நட்புக்கும் அவர்கள் தெரிவிக்கவில்லை
நட்பும் அதை சட்டை செய்யவில்லை
காதல் செய்யும் ரகளை இதுவே
அதை நாமும் உணரும் தருணம் இதுவே
(தொடரும்)