தேவதை தினம் வருகிறாள்
தேவதை தெருவீதியில் தினம் வருகிறாள்
தேவதை விழிகளில் ஆலய தீபம்
தேவியின் தரிசனத்திற்கு தேவதை செல்கிறாள்
தேவதை தரிசனத்திற்கு நான்
தேவியின் தீப ஆராதனையில் தேவதை தன்னை மறந்து
தேவதையின் ஆராதனையில் நான் என்னை மறந்து ....
ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாக
தேவதை யாய்யவள் நித்தம் வருகிறாள்
தேவதை தன்விழிதன் னில்ஆ லயதீபம்
தேவதை தேவியின் ஆரா தனைதனில்
தேவதைக் காக இவன் .
ஒரு விகற்ப ப ஃ றொடை வெண்பாவாக
தேவதை யாய்யவள் நித்தம் வருகிறாள்
தேவதை தன்விழிதன் னில்ஆ லயதீபம்
தேவதை தேவியின் ஆரா தனைதனில்
தேவதை தன்னை மறந்துதான் நிற்கிறாள்
தேவதைக் காக இவன் .
------கவின் சாரலன்