என்ஜினியரின் காதல் வால்வு / வாழ்வு...

என்ஜினியரின் காதல் வால்வு / வாழ்வு

கேட்டா என்னுள் வந்தாய்,
கேட்டிருந்தாலும் வேண்டாம் என,
சொல்லித்தான் இருப்பேனா? அப்படியே சொல்லி,
இருந்தாலும் நான் தான் இன்று வரை வாழ்ந்திருப்பேனா?
இதமாய் இதயமாய் வந்த நீ என் இதயத்தை துடிக்க வைக்கும்,
நான்-ரிடர்ன் வால்வ் அன்றோ? என் வாழ்வன்றோ? வாழ்ந்திருப்போம் வால்வ்வாய் நீ இருக்கும் வரை.

கர்மம்டா - வால்வ்வா / சாவா எனத் தலையில்,
அடித்துக் கொண்டாள் காதலி - வால்வ்வை அலுவலிலும்,
வாழ்வை காதலிலும் வைக்கத் தெரியாத என்ஜினியர் காதலனை நினைத்து.

தொழிலை காதலிலும், காதலை தொழிலும் கலக்காதிருந்து காதலியுங்கள்.
செய்யும் தொழிலை காதலியுங்கள், காதலையும் காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

எழுதியவர் : நட்புடன் (19-Jun-11, 2:47 pm)
சேர்த்தது : நட்புடன்
பார்வை : 348

மேலே