ஒளிரும் இந்தியா
வீதியெங்கும் மேடு பள்ளம்
சாக்கடையில் நோய்கள் தங்கும்
நீர் நிலையில் சாயத்தண்ணீர்
நீள் விசும்பில் குப்பைக்கூளம்
மனத்திரையில் மாய ஓலம்-இந்த
மக்களாட்சி மாண்பு சொல்லும்
'ஒளிரும் இந்தியா'

