கவினும் கவிதாவும்

கவினும் கவிதாவும் முக நூலில் தான் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள் ,, அறிமுகமான சில நாட்களிலேயே முகநூல் அரட்டையில் பேசி பழக ஆரம்பித்து விட்டனர் ,,


இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர் என்றாலும் கூட இதுவரை கவினும் கவிதாவும் சந்தித்து கொண்டதே இல்லை ,,ஒருவரையொருவர் பார்த்தது கூட இல்லை,

கவின் எத்தனையோ முறை கேட்டும் சந்திக்க மறுத்து விட்டாள் கவிதா , எப்படியோ இந்த முறை கவின் பல முறை கெஞ்சி கவிதாவிடம் சம்மதம் வாங்கி விட்டான் , நாளை ரெஸ்டான்டிற்கு வர சம்மதித்தாள் ,மஞ்சள் உடையில் வருவதாக கூறினாள் ,

கவிதாவை சந்திக்கும் போதே தன் காதலை கவிதாவிடம் ப்ரொபோஸ் செய்ய முடிவு செய்தான்,

கவினுக்கு தூக்கமே வரவில்லை எப்படியோ ஒரு வழியாக விடிந்தது ,

அவசர அவசரமாக எழுந்து பற்களை துளக்கி விட்டு மற்ற வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஒரு வழியாக சொன்ன நேரத்திற்கு ரெஸ்டாரன்டிற்கு வந்து விட்டான் ,கவிதா இனனும் வரவில்லை,

மஞ்சள் உடையில் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள் ,அவளின் முகம் ஆசிட் வீச்சால் தாக்கப் பட்டிருந்தது ,அந்த காயங்கள் கைகளிலும் இருந்தது அவளைப் பார்க்கவே மிக அழங்கோலமாக ஆசிட் தாக்குதலால் அவள் முகம் அறுவெறுப்பாக காட்சியளித்தது

அந்த பெண் கவினிடம் வந்து எஸ் கியூஸ் மி நீங்க தானே கவின் என்றாள்

கவின் எதுவும் பேசாமல் ரெஸ்டாரன்டை விட்டு வேகமாக வெளியேறி விட்டான்

சிறிது நேரத்திற்கு பிறகு கவின் பொக்கே வும் கையில் அழகிய ரோஜாவையும் கொண்டு வந்து கவிதாவிடம் கொடுத்து தன் காதலை கவிதாவிடம் ப்ரொபோஸ் செய்தான்,, ,, ,,

எழுதியவர் : விக்னேஷ் (29-Apr-16, 10:15 am)
பார்வை : 564

மேலே