நமது பார்வையில் தான் இருக்கிறது நன்மையையும் தீமையும்

குருகுலத்துல இருக்கும் பொழுது துரியோதனனுக்கு வருத்தம் . எப்பப் பாரு
தருமனை நல்லவன் நல்லவன்னு சொல்றாங்களே... அப்படி என்ன தான்
அவன் நல்லவன்னு சொல்றாங்களே.. அவனை விட நல்லவனாகனும்னு
முடிவு பண்ணிட்டு துரோணர் கிட்ட கேக்கறான்.
"நானும் தானே இளவரசன், தருமனை மட்டும் எல்லாரும்
நல்லவங்கறாங்களே அதுக்கு நான் என்ன செய்யனும் "
துரோணர் ஒரு முத்து மாலை குடுத்து
" உன் பார்வையில் படற முதல் நல்லவனுக்கு இந்த மாலையை பரிசா குடுத்துட்டு
வந்துடு " அப்படிங்கறார்.
அவன் வெளிய போனான். இரவு வெகு நேரம் கழித்து வந்தான். அப்பவும் அவன் கையில
மாலை இருந்துது.
" குருவே, இன்று பார்த்து என் கண்ணில் நல்லவர்கள் யாரும் படவே இல்லை.
கர்ணன் இருந்திருந்தாலாவது அவனுக்குக் குடுத்திருப்பேன். அவனும் இன்று இல்லை . அதனால இந்த மாலைய நீங்களே வாங்கிக்கோங்க "
துரோணர் திரும்ப வாங்கிட்டார்.
"நாளைக்கு காலை இங்க வா, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்"னு அனுப்பிட்டார்.
மறுநாள் காலை துரியோதனன் வந்தப்ப அங்க தருமனும் இருந்தான். துரோணர் தருமர் கிட்ட
" தருமா, வெளிய போயி, யாரையாவது நல்லவங்கள பாத்தா இந்த மாலைய குடுத்துட்டு வந்துடு "
அப்படின்னார். தருமனும் போனார்.
போன வேகத்துல திரும்பி வந்து, " குருவே, ஒரே மாலை
தானே குடுத்தீங்க, வெளிய ஆயிரக்கணக்குல நல்லவங்க இருக்காங்களே அவங்களுக்கெல்லாம் என்ன வழி " என்று கேட்டாராம் .
துரோணர் இருவரையும் பார்த்து சொன்னாராம்.
" துரியோதனா உன் மனதின் நோக்கப்படி தேடின.. நீ பார்த்த பார்வையில் யாருமே நல்லவங்களா இல்லை. ஆனா தருமனுக்கு எல்லாரும் நல்லவங்களா பட்டாங்க. தேடல் என்பது மனதின் சம்பந்தம் உடையது. நாம் எது குறித்து தேடுகிறோமோ அதுக்கேத்தா மாதிரி தான் பலன் கிடைக்கும் என்றார் .

இப்படி ஒரு கதை உண்டு மஹாபாரதத்துல.
இதை போல இராமாயணமத்தில் ஒரு கதை இருக்கு.

அனுமன் சீதைய தேடி இலங்கைக்கு
போனாராம். அவருக்கு ஒரே கோபம் என்ன கண்றாவி இலங்கை இது எல்லாமே சிவப்பு கலரு, மரங்கள், வீடுகள், மாளிகைகள் என எல்லாமே
சிவப்பு வர்ணம். இலங்கை அவ்ளோ அழகு அழகுன்னு
சொன்னாங்களே.. எங்க தேடுனாலும் எதை பாத்தாலும் சிகப்பு வர்ணமாக தெரியுதேன்னு அலுத்துக் கொண்டார் .
பிறகு சண்டை முடிஞ்சு மறுபடியும் இலங்கைய பார்த்த
அனுமன். அவ்ளோ அழகு. அழகுன்னா அழகு சொல்ல முடியாத அழகு. குழம்பிய அனுமன் . இது அதே இலங்கை தானா இல்ல என்னாச்சு ஏன் இப்படின்னு.
நேரா போய் ராமன் கிட்ட கேட்ட பொழுது .
" பிரபு , நான் முதல்ல வந்தப்ப சிவந்து கிடந்த இந்த இலங்கை, இப்போ இவ்வளவு அழகா இருக்கே எப்படி "
இராமன் சொன்னார் . " நீ பார்க்கும் பார்வையைப் பொறுத்தே நீ தேடுவது கிடைக்கும். நீ முதல்ல வந்தப்ப, சீதைய இப்படி சிறை வச்சவங்கள என்ன பண்றேன் பாருன்னு கோவத்துல இருந்த, உன் கண் சிவந்திருந்தது. எதைப் பார்த்தாலும் சிவப்பா தெரிஞ்சதுக்கு அதான் காரணம். இப்ப கோபம் எல்லாம் தீர்ந்து ஆனந்தமா இருக்க. இப்ப எது தேடினாலும் அழகா தெரியுது. நன்றும் தீதும் உன் கண்ணில் தானப்பா இருக்கிறது " என்று சொன்னார் ...

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (29-Apr-16, 12:19 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 189

மேலே