நினைவுகள் தந்த வேதனை
.உந்தன் நினைவுகளின் சுமையால்
விழிகள் கண்ணீர் சிந்தி
என் மனமும் கனத்து
இதயத்தை வலுவிழக்கச்
செய்கின்றன அன்பே
மீண்டும் ஒரு முறை
வந்து உன் மூச்சினால்
என்னை உயர்ப்பித்து போ
நீ தந்து விட்டுப் போன காயம்
என்னை தினம் கொல்வதால்
உன் காதல் மருந்து மீண்டும்
கிடைக்குமா என்ற
காயங்களும் ஏங்கிக் தவிக்குது தடி
என் உயிர் மீண்டும் மீளுமா என்ற ஏக்கத்தில்
என் உடலும் துயர் கொள்ளுதடி