விவசாயம்
அழகியதொரு கிராமம் அந்த கிராமத்தில் சிறு குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை யாரும் இதவரை மழை பொழிவை கண்டதே இல்லை ,
அந்த கிராமத்தில் மழை பொழிந்தே பல வருடங்கள் ஆகிறது ,விவசாயிகள் ஒவ்வொருவராக அந்த கிராமத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்,
அந்த கிராமத்தில் கால்நடைகளெல்லாம் தாகத்தாலும் பசியாலும் மடிந்து கொண்டிருந்தது,
இந்நிலை நீடித்தால் இப்படியொரு கிராமம் இருந்ததே தெரியாமல் போகிவிடும் ,இந்த கிராமமே அழிந்து விடும் ,
இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என கிராம மக்கள் முடிவெடுத்து ஒரு சாமியாரை தங்கள் கராமத்துக்கு அழைத்து வந்து கிராமத்தின் பிரச்சனையை எடுத்துரைத்தனர் , இதற்கு நல் உபாயம் கூறுமாறு வேண்டினர்,
அதற்கு, நீங்கள் பெரும் பாவம் செய்துள்ளீர் ,முதலில் நீங்கள் செய்த பாவத்தை திருத்திக் கொள்ளுங்கள் அப்போதே உங்கள் கிராமத்தில் மழை பொழியும் என்று சாமியார் கூறினார் ,
சாமியார் கூறியதிலிருந்து ஜாதி ,மதம் ,இனம் ,மொழி,பணம் ,என்னும் பாகுபாடுகளை விட்டு அன்றிலிருந்து அந்த கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு ,அனைவரும் ஒற்றுமையாய் உழைத்து ,உழைப்பில் வரும் அனைத்தையும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சரிசமமாக பகிர்ந்துண்டு வாழ ஆரம்பத்தினர் ,
சில நாட்களுக்கு பிறகு மழையும் நன்றாக பொழிய துவங்கியது,
விவசாயிகள் எல்லாம் தங்கள் நிலத்தை உழ ஆரம்பித்தனர்,
அந்த கிராமத்தை விட்டு சென்றவர்கள் ,பறவைகள் எல்லாம் திரும்பி அந்த கிராமத்திற்கே வந்தனர்
இதே போல் நாமும் பணத்திற்கும் நவீன பொருள் மற்றதின் மேலெல்லாம் ஆசை கொண்டு ஒருவருக்கொருவர் சுயநலமாக வாழ்வதை விட்டு நாம் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவி செய்து பகிர்ந்துண்டு வாழ்ந்தால் நம் தேசத்தில் வறுமையே இருக்காது ,நம் தேசம் உலக நாடுகள் முன்னே தலைநிமிர்ந்து நிற்கும்
ஒற்றுமையாய் வாழ்வோம்
நம் தேசத்து சகோதர சகோதரிகளே
-விக்னேஷ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
