PANAM

பணம் ....................................................................
நேசமாய் வாழ்வதற்கு
நெஞ்சில் ஈரமில்லை
பாசமாய் வாழ்வதற்கு
பையில் பணம் இல்லை
இதுதான் நம் வாழ்க்கை!
மவுசு...................................................................................
காசு இருந்தால்
வாழ்க்கை மாசு
அழகாய் இருந்தால்
ரேட்டு அதிக மவுசு!
தேன்..............................................................................................
உன் விழி புயலால்
என் விழி கவிபாட
என் கவிகள்
தேனாய்
உன் செவிக்குள்
நான் !
ஆணை .........................................................................
பெண்ணை அடிமையாக்கும்
ஆனை
எந்த அரசு
ஆணை இட்டு அடக்கும்
வரதட்சினை வாங்காமல்
தாலி கட்டு
என்று!
அன்புடன்
ராமன்மகேந்திரன்