பிட்

முருகேசு ஒரு கம்பெனிக்கு மேனேஜர் வேலைக்கு மனு போட்டிருந்தார்.

இன்டர்வியூவின் முடிவில் முருகேசுவும், சென்னையைச் சேர்ந்த கோபாலும் தேர்வானார்கள்.

இருவரும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.
அதனால் கம்பெனி முதலாளி, இரண்டு பேருக்கும் மீண்டும் ஒரு ரிட்டன் டெஸ்ட் வைக்கச்சொன்னார்.

இருவரும் டெஸ்ட் எழுதினர்.

இரண்டாவது டெஸ்ட்டில் முருகேசு இருபதுக்கு பத்தொன்பது மார்க் எடுத்தார். கோபாலும் இருபதுக்குப் பத்தொன்பது மார்க் எடுத்தார்.

கம்பெனி முதலாளி கோபாலுக்கு வேலையைக் கொடுக்கச்சொல்லிவிட்டார்.

முருகேசு HR மேனேஜரைப் பார்த்து, “ என்ன சார் அநியாயமா இருக்கு…!!! நானும் கோபாலும் ஒரே மார்க் எடுத்திருக்கோம். அவரு சென்னை. நான் உள்ளூர். நியாயப்படி நீங்க உள்ளூர்காரனுக்குத்தானே வேலையக் கொடுத்திருக்கணும்? என்று வாதம் செய்தார்.

HR சொன்னார். : ரொம்ப சரி மிஸ்டர். ஆனா, எங்களோட 20வது கேள்விக்கு கோபால் “எனக்குத் தெரியாது” அப்படீன்னு பதில் எழுதியிருந்தார்…. ஆனா நீங்க என்ன எழுதியிருந்தீங்க தெரியுமா? “எனக்கும் தெரியாது” அப்படீன்னு எழுதியிருந்தீங்க…..

எழுதியவர் : செல்வமணி (1-Jun-16, 10:25 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 154

மேலே