அனாதை

வையமெங்கும் வாழும்
உயிர்கள் !
அனைத்தும் ஒன்றோடொன்று
உறவுகள் !
திரும்பிய பக்கமெல்லாம்
சொந்தங்கள் !
ஆனால்.............
எனக்கென ஏதும்
இல்லை !
இப்பூவுலகில்
ஒருசெல் உயிரினிக்கும்
பெயருண்டு !
ஆனால்....,.........
பூமிக்கு பாரமாய்
வாழும் எனக்கோர்
பெயரில்லை !
பெயர் அறியா
எனக்கு
ஊரே பெயரிட்டது
அனாதை !