சொர்ணா கணக்கா

சொர்ணா கணக்கா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடியே சொர்ணா, கணக்கா, எங்கடி போயிட்டீங்க?
@@@
எதுக்குப் பாட்டி கூப்பிட்டீங்க? தங்கச்சி கடைக்குப் போயிருக்கா. என்ன வேணும்? சொல்லுங்க பாட்டி.
@@@
இல்ல, அக்கா தங்கச்சி ரண்டு பேரையும் காணமேன்னுதான் நா கூப்பிட்டேன்.
@@@
அதெல்லாம் சரி பாட்டி, எம் பேரு ஸ்வர்ணா, எந் தங்கச்சி பேரு கனகா. நீங்க எங்க ரண்டு பேரையும் கிண்டல் பண்ணற மாதிரி சொர்ணா, கணக்கான்னு கூப்பிடறது சரியில்ல பாட்டிம்மா.
@@@
நா என்னடியம்மா செய்யட்டும். உங்க ரண்டு பேருக்கும் தமிழ்ப் பேர வச்சிருந்தா நா உங்க பேருங்கள சரியாச் சொல்லிக் கூப்பிடுவென். நம்ம மொழிக்கு அணுவளவும் தொடர்பு இல்லாத பேருங்கள உங்களுக்கு வச்சிருக்காங்க. உங்க அப்பனும் ஆத்தாளும்.
@@@
அதுக்கு நாங்க என்ன பாட்டி செய்வோம்.
@@@
சரி அது போகட்டும், உங்க பேருக்கெல்லாம் என்ன அர்த்தம்?
@@@
பாட்டி ஸ்வர்ணா –ன்னா தங்கமான, நல்ல நிறம் –ன்னு அர்த்தம். கனகா –ன்னாலும் தங்கம் –ன்னுதான் அர்த்தம்.
@@@@

என்னடியம்மா ரண்டு பேருக்கும் தங்கம் –ங்கற ஒரே பேர வச்சிருக்காங்க.
@@@@
பாட்டி ரண்டு பேருக்கும் அர்த்தம் ஒண்ணு தான். ஆனா வெவ்வேற பேருங்க தானே.
@@@
எண்டி அதுக்கு சின்னத்தங்கம், பெரியதங்கம் –ன்னு வச்சிருக்கலாமே.
@@@
அதெல்லாம் உங்க காலத்துப் பேருங்க. இப்பெல்லாம் இந்திப் பேருங்கள வைக்கறது தான் நாகரிகம், கவுரவம்.
@@@
எப்பிடியோ போங்கடி. நா இருக்கப்போறது இன்னும் கொஞ்ச காலம்…..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. மொழி சார்ந்த இனப்பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்வர்ணா SWARNA. GENDER: Masculine स्वर्ण & Feminine स्वर्णा. "good colour" or "golden", a contraction of the Sanskrit prefix सु (su) "good" and वर्ण (varna) "colour". :பிஹைண்ட்தநேம்காம்
Kanaka கனகா
કનક; ਕਨਕ; కనక; ಕನಕ; கநக; ; കനക; কনক = Gold
இண்டியாசைல்ட்னேம்ஸ்காம்.

எழுதியவர் : மலர் (12-Jun-16, 3:52 pm)
பார்வை : 168

சிறந்த நகைச்சுவைகள்

மேலே