ரங்நாத் தங்ராஜ்
டேய் ரங்கநாதா, உன்னப் பாத்து மூணு வருஷம் ஆகுதடா . நல்ல இருக்கறயா?
@@@
ம்.ம். ரொம்ப நல்லா இருக்கறேன். எம் பேரு இப்ப ரங்கநாதன் இல்ல. ரங்நாத்.
#@@
ரங்கநாதங்கற பேரெல்லாம் காந்தித் தாத்தா காலத்துப் பேருடா. இப்பெல்லாம் இந்திப் பேரா சுருக்கி வச்சுருக்கதுதாண்டா நாகரிகம். நா பதவி உயர்வு பெற்று பீஹாருக்கு போனென். அங்க எங்கூட வங்கில வேலை பாக்கற யாருக்குமே ரஙகநாதன்ங்கற எம் பேர சரியா உச்சரிக்க முடியல. அவுங்க எல்லாம் என்ன 'ரங்நாத், ரங்நாத்'னுதா கூப்பிடுவாங்க. ரங்நாத் - ங்கறதும் நல்லாத் தானே இருக்குதுன்னு எம் பேர மாத்திட்டேன்.
@@@@
சரி, சரி. நீ சொல்லறதும் நீயாயந்தாண்டா. தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ப் பேராசிரியர்கள் தமிழை வசுசுப் பணம் சம்பாதிச்சு பொழைக்கற
சினிமாக்காறங்க அரசியல்வாதிகள் எல்லாம் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறதைத்தான் பெருமையா நெனைக்கறாங்க. இதையெல்லாம் பேசி என்ன ஆகப்போகுது. நா வர்றண்டா ரங்நாத்.
@@@@
சரிடா... போய்ட்டு வாடா தங்ராஜ்.
####
அட அப்பா சாமி, நா தங்கராசு ஆகவே இருந்துட்டுப் போறேன். தயவு செய்து என்ன தங்ராஜ் -ன்னு கூப்படாதடா ரங்நாத்.
@@@@@@
மொழிப் பற்றை வளர்க்க. மொழி சார்ந்த இனப்பற்றை வளர்க்க.