தொவரகேச்சு

@@@@@
@@@@@
@@@@@

டேய் பொன்னு, தொவரகேச்சு, இங்க வாடா. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்.

@@@@

இதோ வந்திட்டன் தாத்தா. ஆன என்ன தொவரக்கேச்சு, அவரக்கேச்சு -ன்னெல்லாம் கூப்பிடாதீங்க. எம் பேரு த்வாரகேஷ். அது சாமி பேரு.

@@@@@

சரிடா. சாமி பேரா இருந்தாலும் அது தமிழ்ப் பேரா இருக்கணுண்டா. இந்திக்காரங்க யாராவது அவுங்க பையனுக்கு திருமுருகன், வடிவேல், வெற்றிவேல் -ன்னு பேரு வச்சிருக்கறத கேள்விப்பட்டிருக்கறயா. அவுங்களுக்கு இருக்கற இந்தி மொழிப் பற்று நம்ம தமிழர்களுக்கு இல்லையேன்னு நா ரொம்ப வெக்கப்படறண்டா.

@@@@

நீங்க சொல்லறது சரிதான் தாத்தா. எனக்கு த்வாரகேஷ் -ங்கற இந்திப் பேர வச்ச சினிமா மோகம் கொண்ட என்னோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்லி எனக்கு ஒரு நல்ல தமிழ்ப் பேரா வைக்கச் சொல்லி நீங்களே சொல்லுங்க தாத்தா.

@@@@

சரிடா. எந் தங்கம். அவுங்க வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரட்டும். நாஞ் சொல்லறேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. மொழி சார்ந்த இனப்பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (12-Jun-16, 10:01 am)
பார்வை : 79

மேலே