அழகிய தமிழ்மகள் - 1

அவளின் பெயர்தான்
கடவுளைக் காணத்துடிப்பவர்க்கு
கடைசிசொல்
காதலைக் காணத்துடிப்பவர்க்கு
கடவுச்சொல்
அனைவரையும் பிரம்மன் படைக்க
அவளை மட்டும் ரவி வர்மன் படைதான்
அனைவரும் பூவைக்குப் பிறக்க
அவள் மட்டும் பூவிற்குப் பிறந்தால்
அழகிகள் மாநாட்டில் கலந்துகொண்ட
அவளைச் சுற்றி மட்டும் மான் ஆடியது
தேனீக்களால் கட்டப்படாத கூடு
அவளின் உதடு
அவளை வசியம் செய்யமுடியாமல்
தொற்றுப்போகின்றது தகடு
அவள் நீல நதிக்கரையின்
ஓரம் வளரும் நாணல்
அந்த நீல விழியாளை
தூரம் கண்டாலே வழியும் நாணம்
அவள் காட்டில் மட்டும்
கிடைக்கின்ற கனி
அதை அடைய நினைப்பவர்
அனைவருக்கும் பிடிக்கின்றது சனி
அவள் தாமரையில்
வீற்றிருக்கும் பனி
அவளழகைப் பாடுவதின்றி
எனக்கு வேறேது பணி