உயிருள்ள உறவு
சிகிச்சை பலனின்றி
உயிர் போனது
உன்னால்
எங்கே போயிருந்தாய்
***************************
சிகிச்சை பலனின்றி
உயிர் போனது
உன்னால்
எங்கே போயிருந்தாய்
என்னை விட்டு
என் கொலைகாரா
கொள்ளைக்காரா
***************************
பணத்தை தயார்
செய்து விட்டு வரும் முன் உயிரை வசூல்
செய்து விட்டாயே
அவள் பாசத்தை தேடினாள்
நீ பணத்தை தேடினாய்
நான் பிணத்தை தேடினேன்
இனிமேல் நான்
யாருக்காக சம்பாதிக்க வேண்டும்
யாருக்காக வாழவேண்டும்
அவளே இல்லை என்றான பின்பு
என்னையும் ஏற்றுக்கொள்
அவள் இல்லா உலகில்
ஒரு நொடி கூட
என்னால் வாழ முடியாது
நான்
உனை போல் நேரத்திற்கு தகுந்தாற் போல் நடிப்பவன் அல்ல
உன் விதி முடியட்டும்
உனை பைசல் செய்கிறேன்
நான் எங்கு நடித்தேன்
நான் என்ன செய்வது
இந்த உலகம் தான்
எனை பணம் பணம் என்று விரட்டியது
நான் ஒன்றும் கோடீஷ்வரன் ஆக வேண்டுமென்று
பணத்தின் பின்னால் ஓடவில்லை
சாதாரண வாழ்க்கை வாழ தான்
என் சந்தோஷங்களையும்
துக்கங்களையும்
எனக்குள்ளே சுமந்துகொண்டு
இயந்திர உலகத்தில் மனதில் உள்ள ஆசாபாசங்களை விடுத்து
மனதை கல்லாக்கிக் கொண்டு ஓடினேன்.....
எனை பற்றி அவளுக்கு தெரியும்
அது போதும் எனக்கு
அப்பா
அம்மா இறக்கறதுக்கு
முன்னாடி
உங்கள பத்தி கடைசி வாக்குமூலம் கொடுத்தாங்க.
உங்ககிட்ட சொல்லணும்னு தோனுதுபா
அவர் என்ன
கீழயே விட்டதில்ல
என்ன எப்பயும் நெஞ்சுலயே சுமந்திட்டுருக்காரு.
இப்ப கூட
என்னவிட்டு பிரிய முடியாம எப்படியும் காப்பாத்திடலாம்னு
வெளிய போயி
பணம் எடுத்துட்டு வர போயிருக்காரு.
உங்களுக்கே தெரியும்
அப்பா எவ்ளோ நல்லவர்னு.
நீங்க எப்பயும்
அவர் பேர காப்பாத்தணும்.
உங்கள பத்திதான் எப்பயும் அப்பா பேசிட்டே இருப்பாரு.
அவர் வரும்போது நான்
உயிரோட இருப்பனானு தெரியல.
நான் இல்லனா மனசு உடஞ்சிடுவாரு.
அப்பாவ பக்கத்திலயே இருந்து பாத்துக்கோங்க.
அம்மா கடைசியா
நெஞ்ச புடிச்சி
என்னங்க சொல்லிட்டு
கண்ண மூடிட்டாங்கப்பா
நம்ம எல்லாரையும் தவிக்கவிட்டு போய்டாங்கபா
அம்மா...அம்மா....அம்மா
(அம்மாவின் நெஞ்சில் தலை வைத்து அப்பா அழுகிறார்.
சிறிது நேரத்திற்கெல்லாம்
அமைதி நிலவுகிறது.
அழுவும் சத்தம் இல்லை)
அப்பா
அப்பா
என்னாச்சுபா
எழுந்திருங்கபா
அப்பா....
அப்பா
நீங்களும் என்னவிட்டு போகாதீங்கபா
எழுந்திருங்கபா
அப்பா........
என்னங்க என்னாச்சுங்க
(ஊரிலிருந்து என் மனைவி அடித்து பிடித்து மூச்சு வாங்க ஓடி வந்து நிற்கிறாள்)
அம்மாவும் அப்பாவும்
இறப்பையும் பகிர்ந்துகொண்டனர்
என் தாயும் தந்தையும்
ஒருவர் மீது ஒருவர்
இந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.
என்னங்க என்று என்னவள் எனை கட்டிக்கொண்டு ஆறுதல் மொழி உரைத்தாள்
என்னங்க மனசு வலிக்குதுங்க
நமக்கு எல்லாமாவும்
இருந்தாங்க.
நான் மாமா அத்தைனு
சொன்னத விட
அம்மா அப்பானு சொன்னது தான் அதிகம்.
மேல இருந்து நம்மள நல்லா பாத்துப்பாங்கங்க.
நெஞ்சு வலிக்குதுடி
எனக்கும் தாங்க.
மனச விட்றாதீங்க.
நம்ம கூடவே தான் அம்மா அப்பா இருப்பாங்க.
அவங்க மூச்சு காத்து இங்கயே தான் உலவுது
அழாதீங்க
அழாதடி
முடியலிங்க...
மனச விட்டு ரெண்டு பேரும் அழுதிட்டே இருக்காங்க
அவர்களின்
அம்மா அப்பா
உயிர்களின் மீது சாய்ந்து
நம் கடவுள்கள் நம் வீட்டிலேயே
வாழட்டும் என்று
வீட்டு தோட்டத்திலேயே
கோவில் எடுத்து
அவர்களுடன் வாழ்ந்தனர்
தலைமுறை தலைமுறையாக
~ பிரபாவதி வீரமுத்து