கொல்லாதே

அண்டம் அறியும்....................
கத்தி கிழித்த மேனி
துடிதுடித்து மரணிக்கும் !
இதயஓசை பன்முறை கேட்டு
உயிர் பிரியும் !
பிரிந்த உயிரை மீட்க
புவியினில் யாருமில்லை !
ஆனால்............
வாளினும் கூரிய கண்கள்
வீசிய பார்வை
இதய நரம்பினை துண்டாய்
கிழித்ததே !
கத்தி கிழித்தால் இதயஓசை
பன்முறை கேட்கும் !
கண்கள் கிழித்தால் இதயம்
துடிப்பதே நின்றுவிடும் போலும் !
விழிகள் நெஞ்சை கிழித்த
கனத்தில மடிந்தேன் !
மடிந்த என்னை உன்
வசீகர புன்னகையால்
உயிர்பித்தாய் !
புத்துயிர் பெற்றவனை மீண்டும்
விழிகளாலே கொன்றாயே !