மாமா மடியில வாங்கிக்கோங்க
என்னங்க வந்து சாப்பிடுங்க
நீ ஏன் நிக்கற.
நீயும் கூட உக்காந்து சாப்பிடு
இல்லங்க. நீங்க சாப்பிடுங்க. நான்
பொறுமையா சாப்பட்றன்.
ஏன்மா
சோத்துல விஷம் எதுனா
இருக்கா?
என்னங்க
இப்படி
சொல்லிட்டிங்க
சாப்பாடு
நான் தாங்க செஞ்சன்.
புருஷன் சாப்டு
முடிச்சதுக்கு
அப்றம் தான்
பொண்டாட்டி
சாப்டணும்
நீங்க நம்பலன்னா
உங்க கையாலயே
ஊட்டி விடுங்க...
சரி ஆ காட்டு
ஆ...
ஒரு வாய் இரண்டு வாய்
மூன்று வாய்
போதுங்க
நீங்க சாப்பிடுங்க...
அவளின் கண்கள் சொருகுகிறது
யாவும் மங்கலாகிறது
உலகம் சுழலுகிறது
கால்கள் இடறுகிறது
கை எதையாவது பற்றிக்கொள்ள முயற்சிக்கிறது
வாயிலிருந்து
என் தாய் கொடுத்த பாலின் வண்ணத்தில் எச்சில் வழிகிறது
அவர் இட்ட குங்கும நிறத்தில் செந்நீர் ஊற்றுகிறது
மயங்கி
விழுகிறேன்
சாப்பாட்டு மேசையில்
பின் அவர் பிடிக்க முயல்கையில்
நழுவி கீழே
தரையில்.....
இரத்தம் தளம் முழுமையும்
என் உடல் முழுவதும்
காரணம்
நான் விட(ஷ)ம் உண்டேன்
சோற்றில்(சாதத்தில்) அல்ல
அவர் கையிலும் அல்ல
அவர் வார்த்தையில்
அவர் விளையாட்டுக்கு தான் கூறினார்
ஆனால் ஏனோ
நிஜமாகவே
என் இதயத்திற்கு போகும் இரத்தக்குழாய் வெடித்தது
~ பிரபாவதி வீரமுத்து
****************************
கவிதையின் கரு:
நேற்று (10.06.2016) என் தோழி கல்லூரியில்
எனக்கு உணவு ஊட்ட
வாயை திற என்றாள்.
நான் வேண்டாம் என்றேன்.
அதற்கு அவள் இது ஒன்னும் விஷம் இல்லடி என்றாள்.
அதற்கு நான் கூறினேன்.
" நீ விஷமே ஊட்டினாலும் நான் சாப்பிடுவன் சூர்யா "
அதற்கு பின்
என் தோழியான அன்னை அவள்
ஊட்ட
நான் ஒரு வாய் வாங்கினேன்.
~ பிரபாவதி வீரமுத்து
********
என்னை எவ்வளவு
வேண்டுமானாலும்
குத்திக் கொல்லுங்கள்
ஆனால் உங்கள் மீது
சிறு கீறல் விழவும் நான்
அனுமதிக்கமாட்டேன்
அதை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது
அம்மாவிற்காக முன்பே
எழுதியது
என் தாயுமானவருக்கும் பொருந்தும்
அதை சொல்கிறேன்
நீ சொன்னால்
விஷம் கூட
குடிப்பேன் நான்
ஆனால்
ஒரு விண்ணப்பம்
உன் மடியில்
இடம் கொடுப்பாயா
~ பிரபாவதி வீரமுத்து
*(((***(((*****)))***)))*
நீ சாப்பிட
வேண்டுமென்று தானடி
விளையாட்டிற்கு கூறினேன்......
விளையாட்டு விபரீதமானதடி
கள்ளி
எழுந்திருடி
செல்லம் பட்டு தங்கம் வைரம்
எழுந்திருமா
நான் என்னமா
தப்பு பண்ணன்
உனக்கே தெரியுமில நான் விளையாட்டுக்கு தான் சொல்லியிருப்பனு
எனக்கு தெரியுங்க
ஆனா
அந்த நொடி
உங்களுக்கு எதுனா வலிய குடுத்திட்டனோ
அப்படினு
நெனைக்கும் போதே
நெஞ்சு வலிக்க ஆரம்பிச்சிடுது மாமா
~ பிரபாவதி வீரமுத்து