பெண்ணின் கண்கள்

உடலில் இருக்கும் சாதாரண உறுப்பல்ல நீ!
பல ஆண்களை உறங்க விடாமல் செய்யும் உன்னத படைப்பாவாய் நீ!!
கண்ணீர் ஊரும் சிறு ஊற்றல்ல நீ!
உண்மை உணர்வுகளை கொட்டும் ஒளிமயமான உறுப்பு நீ!!
ஒளி மட்டும் கொடுக்கும் விழியல்ல நீ!
உலகில் நல்லதையும் கெட்டதையும் பார்க்கும் கண்ணல்லவா நீ!!
உன் கண்ணில் என்னைப் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல நீ!
நீ என் மீது வைத்த காதலை மொழி பெயர்க்கும் கயல் அல்லவா நீ!!

எழுதியவர் : (15-Jun-16, 1:54 pm)
சேர்த்தது : மாரீஸ்வரி மலர்
Tanglish : pennin kangal
பார்வை : 87

மேலே