மாரீஸ்வரி மலர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மாரீஸ்வரி மலர் |
இடம் | : |
பிறந்த தேதி | : 21-Aug-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 11 |
விழியின் மூடி இணைந்து கொண்டு...
திறக்கப்படும் சொர்க்க வாசல் கதவொன்று...
நீ வருவதற்கு நேரங் காலமில்லை...
இரவு நேரங்களில் நீ வரவில்லை என்றால் பெரும் தொல்லை...
என் ஆசையெல்லாம் எப்போது நடக்குமோ என்று நினைக்க...
அதை சொப்பனம் மூலம் எடுத்துச் செல்வாய் மனம் மகிழ்ந்திருக்க...
ஒரு நாளுக்கு நீ வேண்டும் எட்டு மணி நேரம்...
அம்மா வந்து எழுப்பும் போது நான் சொல்வேன் இன்னும் கொஞ்ச நேரம்...
நீ வரும் வேளையில் உன்னைத் தடுப்பதில்லை என் விழிகள்...
உன்னை ஒவ்வொருவரும் சந்திப்பர் மரணம் மூலம் ஆறடி குழியில்..
உன் தேகம் பார்த்ததும் ரசிக்க வைக்கும் கலையாக..
கண்ணழகைப் பார்த்து நின்றேன் கற்சிலையாக..
கயல் விழியை மூடும் கண் இமை திரையாக..
கரும்புருவம் கண்ணிற்கு மகுடமாக..
காற்றினிலே ஆடும் கூந்தல் கார் மேகமாக..
காதோரம் ஆடும் தோடு என் இதயமாக..
காற்றுக்கு உயிர் கொடுத்த மூக்கு குழலாக..
மணி முத்துக்கள் ஒட்டி வைத்தது பல்லாக..
அவற்றை மூடிப் பாதுகாக்கும் இதழ் சிற்பியாக..
பாசி மணி ஓடி விளையாடும் கழுத்து பளிங்காக..
குடத்தின் விளிம்பை போல் வளைந்து நிற்பது உன் இடையாக ..
இவை யாவும் பெற்ற நீ என் காதலியாக..
உன் மீது நானிருப்பேன் உயிராக..
நன் வைக்கும் பாசம் என்றும் உண்மையாக..
உடலில் இருக்கும் சாதாரண உறுப்பல்ல நீ!
பல ஆண்களை உறங்க விடாமல் செய்யும் உன்னத படைப்பாவாய் நீ!!
கண்ணீர் ஊரும் சிறு ஊற்றல்ல நீ!
உண்மை உணர்வுகளை கொட்டும் ஒளிமயமான உறுப்பு நீ!!
ஒளி மட்டும் கொடுக்கும் விழியல்ல நீ!
உலகில் நல்லதையும் கெட்டதையும் பார்க்கும் கண்ணல்லவா நீ!!
உன் கண்ணில் என்னைப் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல நீ!
நீ என் மீது வைத்த காதலை மொழி பெயர்க்கும் கயல் அல்லவா நீ!!
கரிசல் காட்டில் காலை முதல் மாலை வரை உழைத்தது அந்தக்காலம் ...!
கம்ப்யூட்டர் / கைபேசி இல்லாமல் நாளை தொடங்க முடியவில்லை இந்தக்காலம் ...!
குனிந்து வளைந்து செய்யும் வேலை எல்லாம் உடற்பயிற்சிதான் அந்தக்காலம் ..!
கூகுளே உடற்பயிற்சி செய்வதெப்படி எனத் தேடுவது இந்தக்காலம் ...!
கம்பங்கஞ்சி கூழ் குடித்து உடம்பை கச்சிதமாய் வைத்திருந்தோர் அந்தக்காலம் ..!
கண்டதையும் தின்று விட்டு உடம்பைக் கரைக்க வேண்டுமென்று கதருகின்றோர் இந்தக்காலம் ...!
வீட்டிலும் காட்டிலும் மரம் வளர்த்து மழை பெற்றனர் அந்தக்காலம் ...!
இருக்கும் மரத்தை எல்லாம் வெட்டி விட்டு மழை பெய்ய யாகம் வளர்கின்றனர் இந்தக்காலம் ...!
கொஞ்சம் கொஞ்ச
பெற்றெடுத்த அன்னை கூட எங்களை பத்து மாதம் தான் சுமந்தாள்...
ஆனால் நீயோ எங்களை சாகும் வரை சுமக்கிறாய்...
கல்லும் முள்ளும் தன்னைத் தீண்டினாலும் பரவாயில்லை என்று..
அனைவரின் பொன் மலர்ப் பாதங்களை பூப்போல சுமக்கிற உன் மென்மைக்கு ஈடில்லை...
உன் வாழ்நாள் முடிந்ததும் உன்னைத் தூக்கிப் போடும்... காலணியே...
நீதான் நாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களில் சிறந்த அணிகலன்....