அழகிய தமிழ் மகள்

உன் தேகம் பார்த்ததும் ரசிக்க வைக்கும் கலையாக..
கண்ணழகைப் பார்த்து நின்றேன் கற்சிலையாக..
கயல் விழியை மூடும் கண் இமை திரையாக..
கரும்புருவம் கண்ணிற்கு மகுடமாக..
காற்றினிலே ஆடும் கூந்தல் கார் மேகமாக..
காதோரம் ஆடும் தோடு என் இதயமாக..
காற்றுக்கு உயிர் கொடுத்த மூக்கு குழலாக..
மணி முத்துக்கள் ஒட்டி வைத்தது பல்லாக..
அவற்றை மூடிப் பாதுகாக்கும் இதழ் சிற்பியாக..
பாசி மணி ஓடி விளையாடும் கழுத்து பளிங்காக..
குடத்தின் விளிம்பை போல் வளைந்து நிற்பது உன் இடையாக ..
இவை யாவும் பெற்ற நீ என் காதலியாக..
உன் மீது நானிருப்பேன் உயிராக..
நன் வைக்கும் பாசம் என்றும் உண்மையாக..

எழுதியவர் : (17-Jun-16, 5:09 pm)
சேர்த்தது : மாரீஸ்வரி மலர்
பார்வை : 86

மேலே