அந்தக்காலம் இந்தக்காலம்
கரிசல் காட்டில் காலை முதல் மாலை வரை உழைத்தது அந்தக்காலம் ...!
கம்ப்யூட்டர் / கைபேசி இல்லாமல் நாளை தொடங்க முடியவில்லை இந்தக்காலம் ...!
குனிந்து வளைந்து செய்யும் வேலை எல்லாம் உடற்பயிற்சிதான் அந்தக்காலம் ..!
கூகுளே உடற்பயிற்சி செய்வதெப்படி எனத் தேடுவது இந்தக்காலம் ...!
கம்பங்கஞ்சி கூழ் குடித்து உடம்பை கச்சிதமாய் வைத்திருந்தோர் அந்தக்காலம் ..!
கண்டதையும் தின்று விட்டு உடம்பைக் கரைக்க வேண்டுமென்று கதருகின்றோர் இந்தக்காலம் ...!
வீட்டிலும் காட்டிலும் மரம் வளர்த்து மழை பெற்றனர் அந்தக்காலம் ...!
இருக்கும் மரத்தை எல்லாம் வெட்டி விட்டு மழை பெய்ய யாகம் வளர்கின்றனர் இந்தக்காலம் ...!
கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வரும் அந்தக்காலத்தை...!
புதையல் பரிசாகக் கொடுப்போம் நம் சந்ததியினருக்கு ...!