வலிகளின் அகப்புராணம்

பாழடைந்த இதயச் சுவர்களில்,
இவள் காதல் சுவடுகளே!

விழிகளில் கணைகள் தொடுத்து,
முள்தோய்த்த நெஞ்சில் கல்வீசுகிறாள்!
செய்வதறியா நெஞ்சம்!
புல்லாய் உடைந்து! நெருப்பினில்...
நெல்லாய் குழைகிறது!

நமட்டுச்சிரிப்பில், உதட்டுச் சாயங்கள்...
நெஞ்சில் ஊற்றெடுக்க! சீல்...
வடிக்கிறது ஊமைக்காயங்கள்!

எனைநோக்கி உதிர்க்கும் ஏளனசிரிப்பால்!
இதயத்தில் சிதறுகிறது...
இருமுனைக் குண்டூசிகள்!

அவள் மெளனத்தின் மந்திரங்கள்!
தேகம் முழுதும் வலியைப்...
பதிக்கும் இயந்திரங்கள்!

வலியை அறுவடை செய்ய...
வந்திறங்கிய கவிவரிகள், ஏனோ!
ஏனல்கோணலாக இதயஏடுகளை...
கிழித்தெறிகிறது!

சித்தத்தில் சிக்குண்ட சீமாட்டி!
இவள் நினைவால்...
மொத்த உருவமும் உலவுகிறது...
பொம்மையாய் தலையாட்டி!

பித்தம் வீறுநடையிட்டு- சிந்தை
சிம்மாசனத்தில், சிம்மசொப்பனமாய் அமர...
மொத்த செல்களினான உடல்கோலம்,
செல்லரிக்க துவங்கின!

ரத்த நீரோடையில் நஞ்சுகலந்து!
ஒத்த உசுரும் ஓய்ஞ்சி...
ஓராயிரம் நாட்களாகின!

மொழியறியா! ஊமைவிழிகள்!
அசைவுகளால் அரங்கேற்றியது!
தனது நிர்வாணக்கோலத்தை!

உனது மெளனத்தால்! உடன்கட்டையேறிய...
எனது உதடுகளில், உதிரம்...
உறைந்து! சிதிலமடைந்த உருண்டைகள்!
உருண்டோடுகின்றன!

இதயத்தில் கோலோச்சிய காதலால்!
இமையத்தில் திராவகம் பீய்ச்சுகிறது!
பாதத்தில் அமிலக்கொப்புளக்...
கனிகள் காய்க்கிறது!!!

சீராய்ப்பாய்ந்த உதிரம்-மழித்த
சிதிலக் குமிலங்களாகி!
நார்நாராய் கிழிந்தன!
நரைத்த நரம்புகள்!

எண்ணத்தில் என்னவள் வீற்றிருக்க
எலும்புகளில் எரும்புச்சாரைகள்...
ஏத்தம் இறைக்கின்றன!
எலும்பு மஞ்சை, எறும்பு...
புற்றென பட்டா மாறின!

எனது அகப்புராணத்தை, அவளிடம்
பாடினாலும்! அவளது அகமும்ப்புறமும்...
முடவனாகவே! முடங்கிக்கிடக்கிறது!

இனியும் இவள் நினைவுகள்...
என்னைச் சூழ்ந்தால்!
இனியேனும் தாங்காது இதயத்தில்
ஊடுருவிய புழுவினங்கள்! விரைந்து
அழுகிய அகத்தினை புசிக்க,
ஆயத்தமாகும்!
மண்ணரிக்கும் மடல், எனும்
மரபைமீறும் எனது உடல்!!!

எழுதியவர் : Maniaraa (24-Jun-16, 1:37 am)
பார்வை : 361

மேலே