எனக்கொரு உண்மை தெரிந்தே ஆகணும்

எனக்கொரு உண்மை தெரிந்தே ஆகணும் !
----
''தலைவருக்கு பிரஷர் கூடிப் போச்சாமே ,தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பதாலா ?''
''பிடிபட்ட 570 கோடி பணம் திரும்பக் கிடைக்குமான்னு என்பதற்காகவும் இருக்கும் !''

பஸ் மெதுவா போகும்னு இப்படியும் சொல்லலாமா :)
---
''டிரைவர் சார் ,மூணு மணி நேரத்திலே போகவேண்டிய ஊருக்கு ,ஐந்து மணி நேரம் ஆகுதே,ஏன் ?''
''டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கிறதை நீங்க கவனிக்கலையா ?''

மனைவி தந்த கசப்பான அனுபவம் :)
---
''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா?காலையில் ,வாசலில் தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே ,தேவையா எனக்கு ?''

நன்றி ஜோக்காளி

எழுதியவர் : ஜோக்காளி (30-Jun-16, 3:16 pm)
பார்வை : 65

மேலே