ஆறுக்கு உழைப்பவர்கள்
ஆறுக்கு உழைப்பவர்கள்
யாருக்ககு உழைப்பவர்கள்
நாட்டிற்கா? தனக்கா? பிறருக்கா?
என்ற வினாவுடன்
இங்லாந்தில் பிறந்த குழந்தை
இன்று உயரத்தில்
பலரின் கைகளில் தவழுகிறது
ரசிகரின் மனதில் சுழல்கிறது
ஆறு ஆறாய் தாறுமாறாய்
அடிக்க எல்லோறுக்கும் பிடிக்க
வேதனையிலும் சாதனைபடைக்க
நரம்பெல்லாம் புடைக்க
வெற்றிக்கொடி நாட்டுது
கிறிக்கெட் உலகை ஆளுது
சச்சின். சங்கக்கார. லாறா.பொன்டிங்
என சரித்திர நாயகர்களை தந்துவிட்டது
உலகக் கிண்ணம், உள்ளூர் கிண்ணம்
இங்கு ஆறுக்குதான் மதிப்பு
இல்லாவிட்டால் தவிப்பு
இப்போ சூது வாதெல்லாம்
நண்பராகிவிட்டார்கள்
மனங்களில் பல கேள்விகளும்
முட்டி மோதுகிறது
பாரெல்லாம் பட்டையும் கிளப்புது.