அழகே தமிழே

அழகே தமிழே
என் தாயே
சங்க கால முதல்
இவ்விணைய காலம்
வரை வளர்ந்து
மிளிரும் தாயே
அழகே தமிழே....

ஐம்பெரும் காப்பியங்களை
ஈன்றவளே
உலக வேதம்
திருக்குறளைத் தந்தவளே
செம்மொழியான தமிழ்மொழியே
அழகே தமிழே...

பண்பாட்டு மரபுகளின்
தாயே
ஐவகை நிலங்களைத்
தந்தவளே
ஒழுக்க மாண்புகளை
காட்டியவள்
அழகே தமிழே....

புதுமைப்பெண்ணைக்காட்டிய
பாரதியைத்
தந்தவளே
ஆத்திசூடி தந்த
அவ்வையாரை
பெற்றவளே
அழகே தமிழே....

எத்தனை இன்பம்
எவ்வளவு சுவை
சொற்சுவையா
பொருட்சுவையா
எதைச்சொல்ல
அழகே தமிழே....

எழுதியவர் : பச்சைப்பணிமலர் (30-Jun-16, 3:38 pm)
Tanglish : azhage thamizhe
பார்வை : 234

மேலே