காதல் சுவடு

கொள்ளையடிக்க வந்தவனை
கொள்ளை நீ அடித்தவளே!
எப்படி உன்னைக் காதலித்தேன்?
காரணம் நீயொரு தேன்!

இளம் பாவை பூவையானாள்
நானோ தேனீ வண்டானேன்

அவள் தடம்பதித்த இடமெல்லாம்
சிவந்தது!
செவ்விதழ் பதித்த இடமெல்லாம்
இனித்தது!

புள்ளிகளே இல்லாத
புதுக் கோலம்தான்
அவளது பாதச்சுவடு!

பட்டப்பகலில் ஒளிரும் நட்சத்திரம்
அவள் சிந்தும் புன்னகை!

வானவில் வந்து
வளைந்து தலைக் குனிந்து
அவளைக் கண்டால் நாணும்

அவள் உடுத்தி வந்த
வண்ண உடையைக் கண்டால்
வானவில்லும்...

அவள் கண்கள் செய்யும்
ஒவ்வொரு சிமிட்டும்
என் இதயத்தைத் தாக்கும்
மின்வெட்டாகும்!

அந்தக் கார்கால மழையால்
சுட்டெரிக்கும் சூரியனும்
ம(ய)ங்கி விடுகிறது...!
இளமங்கை உன்னால்...
உன்னை மறக்க முடியுமா?
உன் காதலன் என்னால்...

எழுதியவர் : கிச்சாபாரதி (3-Jul-16, 10:16 pm)
Tanglish : kaadhal suvadu
பார்வை : 124

மேலே