நீ என்னோடு இருக்கையிலே
நீ என்னோடு இருக்கையிலே!
====================================ருத்ரா
உன் ஒரு பார்வை போதும்
இந்த வானவில்லை
அதற்கு ஏலம் போடுவேன்.
உன் ஒரு சொல் போதும்
அதற்கு இந்த கடலளவு
பொன் குவிப்பேன்.
உன் இமை சிமிட்டல் போதும்
அந்த இமயங்களை
விரலில் நிறுத்துவேன்.
உன் கூந்தல் இழை போதும்
அதில் ஆயிரம் மயில்களின்
கூடு கட்டுவேன்.
உன் குமிழ்ச்சிரிப்பு போதும்
அதில் முத்துக்குளித்து
பவளப்பாறைகள் அகழ்ந்தெடுப்பேன்.
உன் காதலே போதும்
ஆயிரம் ஆயிரம் சாதல்கள்
எதிர் கொள்ளுவேன்.
உன் உதடுகள் உரசினால் போதும்
கோடிப் பிரபஞ்சங்களுக்கு
அதுவே "சிக்கி முக்கிக்கல்."
அகராதிகள் எதற்கு?
அர்த்தங்கள் எதற்கு?
நீ என்னோடு இருக்கையிலே!
==================================================