நீ நான்-நட்பு மட்டும்

நீயும் நானும்
கை கோர்த்து சென்றோம் வழி முழுதும்,
நீயும் நானும்
மெய் மறந்து பேசினோம் நாள் முழுதும்,
நீயும் நானும்
உயிரும் உடலுமாய் இணைந்தோம் காலம் முழுதும்,
நீயும் நானும்
தனி இரவில் முழு நிலவை ரசித்தோம்
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்????
நமக்குள் கருவானது நம்
''நட்பு'' என்று!!!!
மற்றவர்களுக்கு
நீயும் நானும் 'நாம்'
நமக்கு
நீயும் நானும்'நட்பு'......

எழுதியவர் : நிலா (4-Jul-16, 2:20 pm)
பார்வை : 331

மேலே