திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு நம் வீட்டிற்கு தான் வரவேண்டுமா மற்ற கோவில்கள் செல்லலாமா

திருநள்ளாறு(சனி கிரகத்தின் பரிகார கோவில் ) கோவிலுக்கு சென்று விட்டு நம் வீட்டிற்கு தான் வரவேண்டுமா ?மற்ற கோவில்கள் செல்லலாமா ?
பரிகாரம் என்று சோதிடர்கள் சொல்லும் கோவிலுக்கு செல்ல பரிகாரம் செய்பவர்களுடன் நாம் செல்லலாமா ?

பல நபர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகள் இவைகள் ...

சனியின் தாக்கம் ,தொல்லைகள் ,துவங்கும் /நடக்கும் நபர்களுக்கு சோதிடர்கள் சொல்லும் பரிகார கோவில்களில் மிகவும் அதிகமாக சொல்லப்படுவது திருநள்ளார் சிவ பெருமான் கோவில் ,
இன்று பல நகரம்களில் /மாநிலத்தில் இருந்து பக்தர்கள் பெருமானை தரிசனம் செய்யவும் பரிகாரம் செய்யவும் இங்கு வருகிறார்கள் என்று நமக்கு தெரியும் ,

கோவிலின் ரகசியத்தையும் தெரிந்து கொள்வோம் ...

முசுகுந்த (குரங்கு முகம் ) சக்ரவர்த்தியின் சிவபக்தியாலும் வீரத்தாலும் கவரப்பட்ட இந்திரன் இந்திரா லோகத்தில் தனக்காக போர் செய்து வெற்றி கிடைக்க உதவிய நன்றிக்கு ஓரே மாதிரி 8 சோமஸ்கந்த திருமூர்த்திகளை பரிசளித்தான்,
அந்த 8 சோமஸ்கந்த மூர்த்திகளை பூலோகத்திற்கு எடுத்து வந்த சக்ரவர்த்தி முதல் சோமஸ்கந்த மூர்த்தியை
திரு ஆரூரில் புற்றிடம் கொண்டார் என்னும் சுயம்பு விதி விடங்கனுக்கு கோவில் அமைத்து ப்ரதிஷ்ட்டை செய்தார் .
இரண்டாவது சோமஸ்கந்த மூர்த்தியை
திருகார அகில் வனத்தில் உள்ள சுயம்பு ஆதிவிடங்கனுக்கு கோவில் அமைத்து ப்ரதிஷ்ட்டை செய்தார் ,

மூன்றாவது சோமஸ்கந்த மூர்த்தியை திருகோளலி(திரு குவளை )
உள்ள சுயம்பு அவனி விடங்கனுக்கு கோவில் அமைத்து ப்ரதிஷ்ட்டை செய்தார் ,
நான்காவது சோமஸ்கந்த மூர்த்தியை திருவாய்முயூர் என்னும் இடத்தில்
உள்ள சுயம்பு நீல விடங்கனுக்கு கோவில் அமைத்து ப்ரதிஷ்ட்டை செய்தார் ,

ஐந்தாவது சோமஸ்கந்த மூர்த்தியை வேதாரண்யம் என்னும் இடத்தில்
உள்ள சுயம்பு யுவனி விடங்கனுக்கு கோவில் அமைத்து ப்ரதிஷ்ட்டை செய்தார் ,

ஆறாவது சோமஸ்கந்த மூர்த்தியை நாகை பட்டினம் என்னும் இடத்தில்
உள்ள சுயம்பு சுந்தர விடங்கனுக்கு கோவில் அமைத்து ப்ரதிஷ்ட்டை செய்தார் ,

ஏழாவது சோமஸ்கந்த மூர்த்தியை திருநள்ளாறு என்னும் இடத்தில்
உள்ள சுயம்பு நக விடங்கனுக்கு கோவில் அமைத்து ப்ரதிஷ்ட்டை செய்தார் .

இந்த வரிசை அமைப்பு உடைய கோவில்களை சப்த விடம்கள் என்று குறிப்பிடுவார்கள் .

சோதிடத்தில் சனியின் கிரகத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ள நபர்களுக்கு முகத்தில் கருமையும் உடலில் அசதியும் தோன்றும் ,
சிலருக்கு நரம்பு எலும்பு மண்டல பாதிப்புகள் உண்டாகும் ,
சிலருக்கு கால்கள் முடங்கப்படும் (முறிவுகள் ),காக்கை நிறம் கொண்டவனால் /அடி மட்ட தொழில்கள் செய்யும் நபர்களால் பல தொல்லைகள் ஏற்படும் ,

இப்படி ஏற்படும் காலம்களில் சனியின் கோபத்தை குறைக்க சப்த விட தலம்களை தரிசனம் செய்தால் சுபம் ஏற்படும் என்று கோவில் சுவடுகள் சொல்கிறது ,
இது நாளைடைவில் மருவி திருநல்லூரு கோவிலுக்கு சென்று அந்த குளத்தில் நாம் குளித்து பழைய ஆடைகளை அங்கே விட்டு சனி தேவரை
வழிபாடு செய்தால் நன்மை என்று மாறி கூறப்பட்டு வருகிறது ....

உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் ....
சப்த விடம்களை தரிசனம் செய்வது நமக்கு மிக பெரிய பாக்கியம் ,மேலும் ஒரே நேரத்தில் 7 அல்லது 9 லிங்கம்களை தரிசனம் செய்பவர்களுக்கு ஆயுள் தோஷம் விலகி மேன்மை ஏற்படுவதுடன் சனி ,எமதர்ம ராஜனின் ஆசிகள் கிடைக்கும் என்று ஆசான் அகத்தியர் உரைக்கிறார் .

பரிகாரமாக திருநல்லான் சிவ மூர்த்தியை தரிசனம் செய்து விட்டு மீண்டும் திருவாரூர் வீதி விடங்க நாதனை தரிசனம் செய்தால் தான் பூர்த்தியாகும் பரிகாரம் .
மேலும் சனிக்கு கோவில்கள் கிடையாது அம்மை அப்பன் இருக்கும் இடத்தில் சனியும் ,எமதர்ம ராஜன் இருப்பார்கள் ..

திருநள்ளாறு கோவில் நுழைவில் உள்ளது முருகன் ,இதை நீங்கள் அங்கே நின்று உற்சவரை கவனித்தால் புரியும் ,

நல மகராஜன் சப்த விடம்கள் தரிசனம் செய்து வந்த பொழுது முடிவாக தர்ப்பை நிறைந்த நக விடங்கரை தரிசனம் செய்த பொழுது அசரீரியாக
பெருமான் கோவிலின் பின் வாசலின் வழியாக ஆரூர் எல்லைக்கு வந்து
விடு என்று நலனுக்கு உணர்த்தினார் ,
ஆரூரில் உள்ளே சென்ற நபர்களை சனி ஆசிவத்திற்க மட்டும் உரிமை உண்டு என்று நூல்கள் சொல்கிறது

அரூபமாக இருக்கும் சனி தேவருக்கு தனி கோவில்கள் கிடையாது ,
இவர் லிங்கத்தை வழிபாடு செய்ய வந்த இடம்கள் என்ற தகவலை உடைய கோவில்கள் உண்டு அந்த வரிசையில் இந்த கோவில் முதல் இடம் ....

திருநல்லூரு கோவிலுக்கு சென்று குளத்தில் நீராடி உடைகளை அங்கே விட்டு நீரை மாசுபடுத்த எந்த நூல்களிலும் சொல்லவில்லை ,
நக விடங்கரை தரிசனம் செய்து விட்டு வீதி விடங்கரை தரிசனம் செய்வது சனி தேவரின் ஆசிகளை கிடைக்க செய்யும் ....

இப்படி பரிகாரம் செய்ய யாரும் யாருடனும் செல்லலாம் ,உங்களுக்கு ஆசிகள் கிடைக்கும் ,
பரிகாரம் செய்த கோவில்களில் இருந்து வெளியே வந்தவுடன் 2.5 நாழிகை கழித்து சிற்றுண்டி எடுத்தோ ,அல்லது சிறிது இளைப்பாறி விட்டு
மற்ற கோவிலுக்கு செல்லலாம் ....

1990 ஆம் ஆண்டு சேலம் ஆத்தூர் சாலையில் உள்ள ஒரு சோதிடரிடம்
என் மாமா என்னையும் நண்பரையும் அழைத்து சென்றார் ,
ஒரு பிராமணன் சோதிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் ,
என்னுடைய நண்பனின் கோள்களை கணக்கிட்டு அவர் இந்த சாதகரின் கட்டத்தில் சனியும் சூரியனும் சேர்ந்து அஷ்டமத்தில் உள்ள பொழுது இவர் பிறந்து உள்ளார் ,இன்று இப்படி கோள்கள் சேர்கிறது ,
இவர் அல்லது தந்தை இவர்களுக்கு மாரகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

பரிகாரமாக சப்த விடம்களை தரிசனம் செய்து விட்டு திருகடையூர் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்றார் ,

சற்று குழப்பத்துடன் நானும் நண்பரும் திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு அனைத்து கோவில்களையும் தரிசனம் முடித்து விட்டு வந்தோம் .பிறகு ஒரு நாள் ருத்ர வனத்திற்கு சென்று வழிபாடு செய்தோம் ,இன்று வரை அவர்கள் சுகமாக இருக்கிறார்கள்...

பரிகாரம் செய்பவர்களுடன் செல்லலாம் ,
பரிகார கோவில் சென்று விட்டு 1 மணி நேரம் கழித்து மற்ற கோவில்கள் செல்லலாம் ...

நன்றி

கும்ப முனி
காக்கையர் ஆசைகளுடன் .....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (18-Jul-16, 12:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 996

மேலே