விடைகொடு

உணர மறுக்குதடி என் இதயம்
நீ என் அருகில்
இல்லை என்று தெரிந்தும்...............

தழுவ துடிக்குதடி என் கரங்கள்
கை தொடும் தொலைவில்
நீ இல்லை என்று தெரிந்தும்............

ஏங்கி தேடுதடி தோள்கள்
சாய்ந்துகொள்ள சந்தர்ப்பம்
இனி வாய்க்காது என தெரிந்தும்.........

இமைக்க மறுக்குதடி இமைகள்
உள்ளத்தால் மட்டுமே உன்னை
பார்க்க முடியும்
என்று தெரிந்தும்...................

சிரிக்க தெரிந்த என் இதழ்களுக்கு
உன் மணநாளில்
மறைக்க தெரியவில்லை
அதன் கண்ணீரை இன்றுவரை.......

வாழ்த்துசொல்ல தெரிந்த இதயத்திற்கு
நீ இன்றி வாழ தெரியவில்லை......

அணு நொடியும் ஆண்டவனிடம்
சொல்கிறேன்
என் நினைவு இமைப்பொழுதும்
உன் உள்ளத்தில் எழாதவாறு
உன் கணவன் உன்னை பார்த்துக்கொள்ளட்டும்.....
உன் நினைவுகளுக்கு விடை கொடுக்க தெரியவில்லை
உலகத்திர்க்கவது கொடுத்துவிடுகிறேன்.............

எழுதியவர் : இளங்கோவன் (21-Jul-16, 1:22 pm)
Tanglish : vidaikodu
பார்வை : 159

மேலே