கூடா நட்பு கேடாய் முடியும்

கூடா நட்பு கேடாய் முடியும்
@@@@@@@@@@@@@@@@@@
கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பழமொழி. கெட்டவர்களுடன்
வைக்கும் நட்பு தீவினையத் தரும். திரைக் காட்சிகள் வந்தபின்பு,
வாழ்க்கையில் கெட்டுப் போகும் பலரும் கெட்ட நண்பர்களால் தான். நல்ல
நண்பர்கள் கிடைப்பது அரிது. படித்து முன்னேற வேண்டும் என்று ஊக்கம்
தரும் நண்பர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. கெட்ட விஷயங்களில்
ஈடுபடுத்த முனையும் நண்பர்களே எண்ணற்றோர். அதனால்தான் கல்வி
நிலையங்களில் வன்முறை, அவ்வப்போது நடைபெறும் குற்றச் செயல்கள்.
மாணவ, மாணவியரில் சிலரும் குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் நிலை
அல்லது வளாகங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது, கவர்ச்சியாளர்கள்
போல் ஆடை அணிகலன்களில் அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டுவது,
பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக
நடந்துகொள்வது, தகாத சொற்களைப் பொது இடங்களிலும் பயன்படுத்துவது
போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. பொது இடங்களில் சீருடையுடன்
அநாகரிகமாக நடந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி
மாணவ, மாணவீகள் இளைஞர் திலகங்கள் ஆகியோரின் எண்ணிக்கையும்
பெருகி வருகிறது.
பொதுவாக கல்வி நிலையங்களில் மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்
செய்யும் பணியைத்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் நிறைவேற்றும்
கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான மாணவ, மாணவிகளும்,
இளையோரும் கெடுவது திரைக் காட்சிகளின் தாக்கத்தாலும், கூடா
நட்பினாலும் தான். 50 ஆண்டுகளுக்கு முன்பும் மக்களைக் கெடுக்கும் திரைக்
காட்சிகள் இருந்தன. ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் அக்காட்சிகளை
திரைக் காட்சிகளாகத்தான் எடுத்துக்கொண்டனர் பெரும்பாலான திரைச்
சுவைஞர்கள். இன்று பல இளையோர் பொது இடங்களிலும் அநாகரிகத் திரைக்
காட்சிகளை கூச்சம் சிறிதுமின்றி அரங்கேற்றிக் காட்டும் நிலை பரவி
வருகிறது. அன்று பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளை வாழ்க்கைக்குத்
தயார்படுத்தினார்கள். ஆனால் இன்று அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது
என்பதை நாம் அறிவோம்.
இன்று நாளிதழ்களில் ‘கள்ளக் காதல்’ பற்றி அடிக்கடி செய்திகள்
வெளியாகின்றன. ‘தி இந்து’ நாளிதழில் கள்ளக் காதல் என்ற சொல்லைத்
தவிர்த்து, ’கூடாநட்பு’ என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். நான் நூலகம்
செல்லும் நிலையில் இல்லாததால், மற்ற நாளிதழ்களில் இன்னும் கள்ளக்
காதல் என்றே சொல்லையே பயன்படுத்தப்படுகிறர்களா என்று
தெரியவில்ல்லை.
கூடா நட்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பணி நிமித்தமாக
அதிக நாட்கள் மனைவி அல்லது கணவனைப் பிரிந்து இருப்பவர்கள், அல்லது
கணவன் அல்லது மனைவியுடன் வாழும் காலத்திலும் சிலர் கூடா நட்புக்கு
ஆட்பட்டுவிடுகின்றனர். கூடா நட்பு சிலருக்கு மணமுறிவைத் தரும்; சிலர்
கொலைக்கும் ஆளாகிறார்கள். கூடா நட்பில் கொலை செய்யப்படுவர்களில்
ஆண்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது நாளிதழ்களை
வாசிக்கும் அனைவரும் அறிவர். கூடா நட்பை ஒரு சமூகப் பிரச்சனையாகக்
கருதி சமூகவியல் (Socilogy) உள்ளத்தியல் (Psycilogy) உள்ளத்தியல்
மருத்துவர் (Psychiatry) அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைத்து புலனாய்வு
செய்வது நல்லது.
கூடா நட்பினால் உயிர்கள் பலியாவதுடன் பல குடும்பங்கள்
அவமானத்திற்கு ஆளாக நேரிடுகிறது. மேற்சொன்ன அந்த ஆய்வுக் குழுவின்
அறிக்கையின் அடிப்படையில் அறிவியல் ரீதியான காரணங்களைக்
கண்டறிந்து கூடா நட்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசும், தொண்டு
நிறுவனங்களும் முன்வரவேண்டும்..
இன்றைய வாழ்க்கை முறையே கூடா நட்புக்கு முக்கிய காரணம்
என்பதை நாம் அறிவோம். எனினும் இந்த அவலநிலை நிலவுவது
சமுதாயத்தைச் சீரழிக்கும் செயல் என்பதை நாம் நினவில் கொள்ளவேண்டும்.
கூடா நட்பு, காதலர் ஓட்டம், சாதீய ஆணவக் கொலை, கொலை, கொள்ளை,
வன்முறை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு பற்றிய செய்திகளுக்கு
ஊடகங்கள் அதிகம் முக்கியத்துவம் தருகின்றன. அச்செய்திகளை விரிவாகவும்
வெளியிடுகின்றன்.
இச்செய்திகள் எச்சரிக்கையாக இருந்தபோதிலும் பலர் கெடுவதற்கும்
வாய்ப்பளிக்கிறது. ஒரு புகாரைப் பதிவு செய்தவுடன் அது பற்றி ஊடகங்களுக்கு
தகவல் கொடுப்பதைவிட, குற்றஞ்சாட்டப்பட்டர்வர்களைக் கண்டறிந்து உரிய
தண்டனை பெற்று பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பதில்
காவல்துறை முனைப்பு காட்டினால் நல்லது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு 6 00/- ரூபாய் மதிப்புள்ள
பிளம்பிங்க் பொருடகள் இருந்த பையை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு
சாலையின் மறுபக்கம் உள்ள ஒரு ரொட்டி கடைக்குச் சென்றுவிட்டு மூன்று
நிமிடஙகளில் திரும்பிவிட்டேன். என் பையைக் காணவில்லை. எனது
வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் பல ஆட்டோ ரிக்ஷாக்களும் நின்றிருந்தன.
அவற்றின் ஓட்டுநர்கள் அவரவர் வண்டியில் அமர்ந்து கொண்டு இருந்தனர்.
அருகில் பாதையோரமாக பூ விற்கும் பெண்களும் இருந்தனர். சுமார் 10
பேராவது என் வாகனத்திலிருந்து எனது பையைத் திருடியவரைப்
பார்த்திருப்பார்கள். ஏனெனில் அப்போது (பிற்பகல் 3 மணி) அங்கு மக்கள்
நடமாட்டமு,ம் குறைவு.
ஆனால் நான் திரும்பி வந்து எனது பையைக் காணவில்லை என்று
சொன்னபோது யாரும் எதுவும் சொல்லவில்லை. நானும் காவல் நிலையத்தில்
புகார் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தாலும் அவர்கள் கண்டுபிடித்துத்
தரப்போவதில்லை. ஆனால் வீண் இலவச செய்தித்தாள் விளமபரம்
கிடைப்பதை நான் விரும்பவில்லை. அடிக்கடி அய்யா கூப்பிடுகிறார் என்று
கூறி என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து என் நேரத்தை வீணடித்து,
முடிந்தால் என்னிடம் பணம் கறந்திருப்பார்கள். இதனால் தான் பலர் சிறு
குற்றங்கள் பற்றி புகார்தர காவல் நிலையம் செல்வதில்லை.
வாகனத் திருட்டு, கொலை, தற்கொலை, வழிப்பறி, நில ஆக்கிரமிப்பு,
காணாமல் போனவர் போன்ற குற்ற்ச் செயல்கள் பற்றி புகார் கொடுக்க
மட்டுமே காவல் நிலையம் செல்லும் கட்டாயம் உள்ளது.
இப்போது தொடர் வண்டிநிலையத்தில் ஒரு இளம்பெண் கொலை
செய்யப்பட்டதை வேடிக்கை பார்த்தவர்கள் தடுத்திருக்கலாம் அல்லது
செல்பேசியிலாவது அந்த நிகழ்வைப் படமெடுத்து இருக்கலாம். அல்லது 5
அல்லது 6 பேர் அவனை விரட்டிச் சென்று வீழ்த்தி இருக்கலாம். ஆனால்;
நடந்தது என்ன என்ன என்பதை நாமறிவோம். சமூக அக்கறையில்லாமல்
பொருளியப் பேராசையால் கற்றவர்கள் நிலை இப்படித்தான் இருக்கும்.
அறிவைப் பெருக்கவும் கல்வி துணை புரியவேண்டும். நல்ல நூல்களை வாசிப்பது வாழ்நாள் முழுதும் தொடரவேண்டும். நல்ல நூல்களைக் கற்றுணராதவர்களும் இடம், பொருள் ஏவலுக்கு பொருந்தும் திருக்குறள் ஒன்றையாவது நினைவுக்குக் கொண்டுவராதவர்ளும் கற்றும் கல்லாப் பதர்களே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
( அச்சு மற்றும் கருத்துப் பிழைகள் இருப்பின் தெரிவியுங்கள்.
திருத்திவிடுகிறேன்)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@